• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கணக்கீடுகள்- பத்மப்ரியா

By Staff
|

கலப்பு மணமே சிறந்தது-- என்றாய்

கவனமாய் உன்னிலும்

உயர்சாதியில் காதலியை

தேர்ந்தெடுத்த பின்

காதலில் நிற பேதமா?

அவள் பளிங்கு நிறத்தில்

அமைந்த பின்

பணம் ஒரு பொருட்டா?

மத்திய அரசு ஊழியை என

உறுதியான பின்

வரதட்சினை வேண்டாம்

திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசாக அவள்

கூட்டி கழித்து கணக்கிட்ட பின்

கசிந்துருகி கடிதம் எழுதினாய்

காதலுக்கு கண்ணில்லை

கண்டதும் காதலானேன் என்று

உன் பெற்றோர் ஆசியுடன் புரட்சி திருமணம்

மெளனமாய் ஆமோதித்த

அவர்களுக்கும் தெரியும்

இத்தனை அம்சத்துடன் எந்த ஏமாளியும்

தங்களது ஜாதியில் இல்லை என்று.

- பத்மப்ரியா(padmapriya_raghu@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. என் விருந்தாளி

2. கடிதம்

3. முரண்பாடுகள்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.



 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X