பணத்தாசை?
கண்ணிமைக்கும் நொடிக்குள்
அது நிகழ்ந்துவிட்டது...
எதிரே வந்த பேருந்து
என்மேல் மோத ...இதோ
பாதையோரத்தில் தூக்கி எறியப்பட்டேன் நான்...
கையில் இருக்கும்
ரூபாய் நோட்டுகளை
வறுமைப்பிடியென இறுகப்பிடித்து
சரிந்துகிடக்கும் என்னை
பார்த்தவர்..பார்ப்பவரிடம் சொல்லக்கூடும்
இறக்கும் நிலையிலும் பணத்தாசையோவென...
ஆத்தாவின் மருத்துவச்செலவு
தங்கையின் பட்டுப்புடவை
தம்பியின் மிதிவண்டி கனவுகளுக்கெல்லாம்
தவணைமுறையில் நீர்வார்ப்பதென்னவோ-- நான்
அவ்வப்போது அனுப்பும் சிறுதொகைதான்...
எதோவொரு அவசரத்தில்
பாதையை கடக்கும்போது
பார்த்து நடக்க தவறிவிட்டேன்...
இதோ நினைவு சங்கிலி
தொடர்பை துண்டித்து
தொலைதூரம்சென்று தொலைந்துகொண்டிருக்கிறது...
முகம் தேய்ந்து...முட்டிகள் பெயர்ந்து
இரத்தம் வழிந்தோட - நான்
இறந்துகொண்டிருப்பது வலியில்லை எனக்கு...
தபால்காரன் வரும் திசை நோக்கி
தவம்கிடந்து ஆத்தா படும்
அவதிகள் யாவும் மனதில் வந்துபோனதில்
வலிகள் தந்து போனதால்
நினைவு மறந்த நிலையிலும்
இரத்தத்திட்டுகள் மீது
துளித்துளியாய் கண்ணீர் துளிகள்...
எப்படியும் ஆத்தாவிற்கு
பணம் போய் சேரவேண்டுமென்கிற எண்ணத்தில்
பணத்தை இறுகப்பிடித்து
சரிந்துகிடக்கும் என்னை
பார்த்தவர்..பார்ப்பவரிடம் சொல்லக்கூடும்
இறக்கும் நிலையிலும் பணத்தாசையோவென...
- சாந்தி மனோகரன் ([email protected])
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications