அவர்களின் பாதுகாப்புக்கு நீங்களும் பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா உலகையே படுத்தி எடுத்து வருகிறது. எங்கெங்கும் சோகம், பதட்டம், கவலை, அயர்ச்சி என கலவையான உணர்வுகளில் உலகமே மூழ்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் நமது வாசகர் கெளசல்யா எழுதியுள்ள ஒரு அருமையான கவிதை இதோ.

Thank your doctors nurses and medical service people

உங்களுக்குத் தெரிந்த
மருத்துவர்கள்
செவிலியர்கள்
மருந்தக ஊழியர்கள்
துப்புரவு தொழிலாளர்கள்
காவலர்கள்
தன்னார்வலர்கள்
முகங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள் !
ஒருமுறை அவர்களின்
பெயர்களை சொல்லிப்பாருங்கள் !

நீங்கள் வெளிச் செல்லும் போதெல்லாம்
இவர்களின் வேலைப்பளு
உங்களால் கூடுமென்ற
உண்மையை உணருங்கள் !
உங்கள் பாதுகாப்புக்கு
நீங்களும் அவர்களும் பொறுப்பு !
உள்ளபடியே
அவர்களின் பாதுகாப்புக்கு
அவர்களுடன் சேர்த்து
நீங்களும் பொறுப்பு !!

அவர்களுக்கும் குடும்பம் உண்டு
வாழும் ஆசை உண்டு
அவர் குடும்பத்திலும்
அவர் வரவை
எதிர்நோக்கிக் காத்திருப்பர்
குழந்தைகள் உட்பட !

நம்மை காக்க துணிந்து விட்ட
அவர்க்கு
வீட்டுக்குள்ளேயே இருப்பதுவும்
சுகாதாரமாக இருப்பதுவும்
அன்றி வேறெந்த வழியிலும்
நன்றிக்கடன் செலுத்த இயலா !
மீண்டுமொரு முறை அவர்களின்
முகங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள்!
பெயர்களை சொல்லிப்பாருங்கள் !!

- கௌசல்யா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+