AIயால் ஆட்டம் காணும் இந்திய IT துறை? சமாளிக்க "இந்த" திறன் முக்கியமாம்! பிரபல ஐடி தலைவர் திட்டவட்டம்
சென்னை: ஏஐ தொழில்நுட்பம் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இந்திய ஐடி துறைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக விப்ரோவின் தலைமை திட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஹரி ஷெட்டி முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார். ஏஐ நன்மைகளை விளக்கிய அவர், அடுத்த 20 ஆண்டுகளுக்கு எந்தத் திறன் முக்கியமானதாக இருக்கும் என்பது குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஏஐ மீதான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட வேகமாக கோடிங் எழுதுகிறது. மேலும், டேட்டா பிராசஸிங், டெஸ்டிங் என அனைத்திலும் ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் தற்போது இருப்பது போல இத்தனை லட்சம் ஐடி ஊழியர்கள் தேவை தானா என்ற கேள்வி எழுகிறது.

விப்ரோ தலைவர்
இந்தியாவில் மிகப் பெரிய வேலைவாய்ப்பைத் தரும் துறைகளில் ஒன்றாக ஐடி இருக்கும் சூழலில், இது பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் பெரியளவில் அடி வாங்கி வருகிறது. இதற்கிடையே ஏஐ வளர்ச்சி தொடர்பாக விப்ரோவின் தலைமை திட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஹரி ஷெட்டி (Chief Strategist and Technology Officer), சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் தான் தொழில்நுட்ப உலகில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று அவர் கூறினார். அதேநேரம் இந்தியாவின் ஐடி துறைக்கு இது அச்சுறுத்தலாக அமையாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். ஏஐ காரணமாக வேலைவாய்ப்புகள் பெருமளவு குறையும் எனப் பலரும் அஞ்சுகிறார்கள். ஆனால், ஹரி ஷெட்டி அதற்கு நேர்மாறான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். அதாவது ஏஐ தொழில்நுட்பம் ஐடி நிறுவன வேலைவாய்ப்புகளைக் குறைக்காது. மாறாக அதிகரிக்கவே செய்யும் என்று ஹரி ஷெட்டி கருதுகிறார்.
புதிய வேலைகள் உருவாகும்
ராய்ட்டர்ஸ் இது தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த அச்சம் தேவையற்றது என்று ஹரி ஷெட்டி கருதுகிறார். இது தொடர்பாக அவர், "செயற்கை நுண்ணறிவின் மூலம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் நாம் பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தற்போதுள்ள சில வேலைகளை நீக்கினாலும், அதை விட அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைகளை உருவாக்கும்.
இப்போது ஏஐயின் தொடக்கத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். இப்போது ஆடோமேஷன் மட்டுமே ஏஐ மூலம் நடக்கிறது. ஆனால் நான் அடுத்த லெவல் ஏஐ குறித்துப் பேசுகிறேன். அது ஒரு முற்றிலும் மாறுபட்ட களம். அது ஒட்டுமொத்த ஐடி பிஸ்னஸையும் மாற்றி அமைக்கும். அதாவது வரும் காலத்தில் வெறுமன பிராஜக்ட்களே முடிப்பது மட்டும் வேலையாக இருக்காது. பிஸ்னஸ்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, நிபுணத்துவத்துடன் நெருக்கமாகச் செயல்பட வேண்டி இருக்கும்.
புரட்சி
தொழில்நுட்பத் துறை கண்டிராத மிகப் பெரிய ஒற்றை வாய்ப்பு தான் ஏஐ, மின்சாரம் மற்றும் இணையம் போன்ற முக்கியமான புரட்சிகளுடன் இதை நாம் ஒப்பிடலாம். ஏஐ பற்றிப் பேசினாலே பலரும் வேலையிழப்புகள் குறித்தே பேசுகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி இதில் பல விஷயங்கள் உள்ளன" என்றார்.
மேலும், அவர் உலகப் பொருளாதார மன்றத்தின் ரிப்போர்ட்டை மேற்கோள் காட்டினார். செயற்கை நுண்ணறிவு சுமார் 92 மில்லியன் வேலைகள் அழிக்கும் என்ற போதிலும் உலகளவில் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கும் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுதான் முக்கியம்
வரும் காலத்தில் ஏஐ யூஸ் செய்வோர் மற்றும் யூஸ் செய்யாதோர் இடையே மட்டுமே வேறுபாடு இருக்கும் என்பது அவரது கணிப்பு. இது தொடர்பாக அவர், "இங்குள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் இடையேதான் இருக்கும். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பொதுவாக ஐடி நிறுவனங்களின் பணிகளை விரிவுபடுத்துமே தவிர, அதைக் குறைக்காது. ஏஐ தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்வதே எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications