இந்தியாவில் அதிகரிக்கும் AI வல்லுநர்களின் தேவை! அடுத்த ஓராண்டில் 10 லட்சம் வேலைகள் உருவாகும்
டெல்லி: ஏஐ குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. எங்கு ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படுமோ எனப் பலரும் அஞ்சுகிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் ஏஐ வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இன்னும் ஓராண்டில் ஏஐ சார்ந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை நமது நாட்டில் 10 லட்சத்தைத் தாண்டும் என முக்கியமான ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு பக்கம் ஏஐ காரணமாகப் பலருக்கும் பல வேலைகள் ஈஸியாகி வருகிறது. ஒரு கட்டத்தில் மணிக்கணக்கில் இருந்த வேலை இப்போது நொடிகளில் முடிந்துவிடுகிறது. அதேநேரம் மற்றொரு பக்கம் ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படும் என்ற அச்சமும் அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே பல நிறுவனங்களில் வேலையிழப்பு ஆரம்பித்துவிட்டதாகவும் கூட சிலர் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் ஏஐ புரட்சி
இதற்கிடையே மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் ஏஐ வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. "இந்தியாவின் ஏஐ புரட்சி: விக்சித் பாரதத்திற்கான ஒரு பாதை" என்ற தலைப்பில் இந்த ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஏஐ சார்ந்த கல்வியை மத்திய அரசு நாட்டில் எப்படி விரிவுபடுத்தி வருகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஏஐ துறையில் வேலைவாய்ப்பு 10 லட்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாஏஐ எதிர்காலத் திறன்கள் என்ற திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளிலும் ஏஐ கல்வியை மத்திய அரசு விரிவுபடுத்துகிறது. மேலும், NIRFஇல் முதல் 50 ரேங்கை பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏஐ குறித்த ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப்களையும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை
மேலும், 2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நகரங்களில் டேட்டா செண்டர் மற்றும் ஏஐ ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளும் கூட தீவிரமாக நடந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இது தொடர்பான மாடல் நிறுவப்பட்டுள்ளதாகவும் விரைவில் நாடு முழுக்க நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் 2024-25 கல்வியாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட பிடெக் இடங்களின் எண்ணிக்கையையும் 14.9 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது நான்கு ஆண்டுகளில் சுமார் 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் தேவை
கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் உள்ளிட்ட துறைகளில் தேவை 50%க்கு மேல் அதிகரித்ததே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இது இந்தத் துறைகளில் திறமையான வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.
அந்த ரிப்போர்ட்டில் மேலும், "புதிய கல்விக் கொள்கையின்படி, ஏஐ, 5ஜி, செமி கண்டெக்டர் வடிவமைப்பை உள்ளடக்கிய பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மறுசீரமைத்து வருகிறோம். தற்போது சந்தை தேவையான திறன்களுடன் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்பைக் கொண்டிருப்பதை இது உறுதிசெய்கிறது. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் நேரத்தை இது குறைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்தைத் தொடும்
இதுபோல ஏஐ சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் ஏஐ வல்லுநர்களின் தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தாண்டுக்குள் ஏஐ சார்ந்த வேலைவாய்ப்புகள் இந்தியாவில் 10 லட்சத்தைத் தாண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ காரணமாக வேலையிழப்புகள் ஏற்படும் எனப் பலரும் அஞ்சும் நிலையில், அதே துறையில் ஓராண்டில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ரிப்போர்ட் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications