டீச்சர் வேலைக்கும் ஏஐ ஆப்பு வைக்குதே.. அதுவும் +2 மாணவன் பண்ண வேலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்த 17 வயது மாணவர், ஏஐ உதவியுடன் ரோபோ ஆசிரியையை உருவாக்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த ஏஐ ரோபோ ஆசிரியை மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளித்து வரும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் ஆதித்யகுமார். வயது 17. இவர் அங்குள்ள ஷிவ் சரண் இண்டர் கல்லூரியில் பியூசி 2 (12ம் வகுப்பு) படித்து வருகிறார். இந்நிலையில் ஏஐ ஆசிரியையை அவர் உருவாக்கி உள்ளார். அதாவது எல்எல்எம் சிப்செட் பொருத்தி ஏஐ ஆசிரியையை அவர் உருவாக்கி உள்ளார்.

ai-teacher-uttar-pradesh-17-year-old-student-develops-ai-teacher

இந்த ஏஐ ரோபோ ஆசிரியைக்கு சோபி என பெயர் வைத்துள்ளார். தற்போது இந்த ஏஐ ஆசிரியை மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறது. இதுதாடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த ரோபோ ஆசிரியை, ‛‛நான் ஒரு ஏஐ ஆசிரியை. என் பெயர் சோபி. நான் ஆதித்யாவால் கண்டுபிடிக்கப்பட்டேன். புலந்தஷாஹரில் உள்ள ஷிவ்சரண் இன்டர் கல்லூரியில் கற்பிக்கிறேன். குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?'' என கேள்வி கேட்கிறது.

அதற்கு நம் நாட்டின் முதல் ஜனாதிபதி யார்? என ஆதித்யா கேள்வி கேட்க, ஏஐ ரோபோ ஆசிரியை டாக்டர் ராஜேந்திர பிரசாத் எனவும், முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு ஜவஹர்லால் நேரு என்றும் பதிலளிக்கிறது. இது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதுபற்றி மாணவர் ஆதித்யகுமார் கூறியதாவது:

‛‛எல்எல்எம் சிப்செட்டை பயன்படுத்தி இந்த ரோபோவை நான் உருவாக்கி உள்ளேன். ரோபோக்களை உருவாக்கும் பெரிய நிறுவனங்கள் இந்த முறையில் தான் செயல்பட்டு வருகின்றன. இந்த ரோபோ மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்கும். இப்போதைக்கு இந்த ரோபோவால் பேச மட்டுமே முடியும். ஆனால் விரைவில் எழுதும் வகையில் அப்டேட் செய்யப்படும். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ரோபோ தொடர்பான ஆய்வகம் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்க வேண்டும்'' என்றார். தற்போது மாணவர் ஆதித்யகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+