மனித குலத்தையே அழிக்கும் AI.. நமக்கு கொஞ்சம் டைம் தான் இருக்கு! ஏஐ குரு கொடுத்த வார்னிங்
டெல்லி: ஏஐ மாடல்கள் நமக்குப் பல்வேறு வழிகளிலும் உதவுகின்றன. அவை எந்தளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு அவை ஆபத்தாக மாறவும் வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே செர்னோபில் அணு ஆலை வெடிப்பிற்கு இணையான ஒரு பேரழிவு ஏஐ காரணமாக நடக்கலாம் என ஏஐ குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார்.
ஏஐ காரணமாக மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்படலாம் எனப் பல வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே யுசி பெர்க்லி பேராசிரியரும் சர்வதேச பாதுகாப்பான மற்றும் நெறிமுறை AI சங்கத்தின் தலைவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல் ஏஐ தொடர்பாகச் சில முக்கியமான எச்சரிக்கைகளை வழங்கியுள்ளார்.

ஸ்டூவர்ட் ரஸ்ஸல்
டெல்லியில் என்டிடிவி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இயந்திரங்கள் சிந்திக்கத் தொடங்கினால் மனித குலத்திற்கு என்ன நேரிடும் என்ற கேள்விக்கு உலகத்திடம் இன்னும் பதில் இல்லை என்று தெரிவித்தார். ஏஐ நெறிமுறை மற்றும் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் உலகத் தலைவர்கள் சீக்கிரமே செயல்பட வேண்டும் என்றும், அப்படிச் செயல்படத் தவறினால் செர்னோபில் அணு உலை விபத்திற்கு இணையான ஒரு பேரழிவு அவர்களை உலுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஏஐ காரணமாக மனித குலத்திற்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளது என்பதைக் கிட்டத்தட்ட எல்லா சிஇஓக்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். என்னைத் தனிப்பட்ட முறையில் கேட்டால் இது நிற்க வேண்டும் என்றே சொல்வேன். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டேரியோ அமோடை மட்டுமே இது குறித்து வெளிப்படையாக எச்சரித்துள்ளார். ஆனால் மற்ற சிஇஓக்கள் தனிப்பட்ட முறையில் இதேபோன்ற எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளனர்.
கவலை
அவர்களில் ஒருவர் நிஜமாகவே இது குறித்து ரொம்பவே கவலைப்பட்டார். இதன் அபாயங்கள் மிகவும் மோசமானவை என்றும் செர்னோபில் அளவிலான பேரழிவு கூட ஏற்படும் என்றும் அவர் கூறினார். அந்தச் சூழல் வந்தால் தான் உலக நாடுகள் விதிமுறைகளை வகுக்கும். செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை உலக நாடுகள் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு, தங்களது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
முதலில் என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை உணர வேண்டும். பிறகு எந்தளவுக்கு விளைவுகளை ஏற்று கொள்ளலாம். அதை அனுமதிக்க முடியாது என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
செர்னோபில் பேரழிவு
இதில் அவர் செர்னோபில் பேரழிவுக்கு இணையான அழிவு ஏற்படும் என சொல்லியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான அணு ஆயுதப் பேரழிவு என்றால் அது செர்னோபில் அணு உலை விபத்து தான்.. 1986 ஏப்ரல் மாதம் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் உள்ள பிரைப்பியாட் நகர் அருகேயுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அணுமின் நிலையம் அமைந்திருந்த பகுதியை மக்கள் மொத்தமாகக் கைவிடும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அந்தளவுக்கு ஒரே பேரழிவுடன் தான் ஏஐ தொழில்நுட்பத்தை ஸ்டூவர்ட் ரஸ்ஸல் ஒப்பிடுகிறார். மேலும், தங்களை விட அதிக பவர்புல்லான ஒன்றின் மீது மனிதர்களால் ஆதிக்கத்தைத் தொடர முடியுமா என்ற கேள்விக்கு அவர், "கம்பியூட்டர் உருவான போதே 20ம் நூற்றாண்டின் ஆக சிறந்த மேதையான ஆலன் டூரிங் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
கண்ட்ரோல் இருக்காது
இந்த இயந்திரங்கள் மனிதர்களை விடச் சக்திவாய்ந்தவையாக மாறும்போது, அவை சீக்கிரமே நமது திறன்களை விஞ்சிவிடும். அப்போது மெஷின்கள் முழு கண்ட்ரோலை எடுத்துக் கொள்ளும் என்பதே ஆலன் டூரிங் கருத்து. இப்போது கிட்டத்தட்ட அதுதான் நடக்கிறது. மனிதக் குலமே அழியலாம் என்று கருதப்படும் தொழில்நுட்பத்திற்கே நாம் அதிகத் தொகை செலவிடுகிறோம். இது எப்போதோ வரும் ஆபத்து இல்லை. ஏஐ மாடல்கள் மனித கண்காணிப்பில் இருந்து தப்பச் சீக்கிரமே நமக்குப் புரியாத மொழிகளில் பேச தொடங்கும்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications