மனிதர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மாரத்தான் ஓடிய AI ரோபோட்! சீனாவில் வினோதம்
பெய்ஜிங்: மாரத்தான் போட்டியில் மனிதர்கள் ஓடி பார்த்திருப்போம். ஆனால் சீனாவில், AI ரோபோக்கள் மனிதர்களுடன் மாரத்தான் ஓடியுள்ளன. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்த போட்டி நடைபெற்றிருக்கிறது. போட்டியில் மனிதர்களுடன் சேர்ந்து ரோபோக்களும் ஓடியிருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பெய்ஜிங்கில் சுமார் 21.1 கி.மீ தொலைவுக்கு இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மனிதர்களுடன் சேர்ந்து ரோபோக்களும் ஓடியிருக்கின்றன. மனிதர்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றியிருக்கின்றனர். ரோபோக்களுக்கு சில பிரத்யேகமான விதிமுறைகள் போடப்பட்டிருந்தன. குறிப்பாக பேட்டரியை மாற்றுவதற்காக பிரேக் டைமும் கொடுக்கப்பட்டிருந்தது. சில ரோபோக்களால் சரியாக ஓட முடியவில்லை. தவறி கீழே விழுந்திருக்கின்றன.
சில ரோபோக்களுடன் அதன் தயாரிப்பு குழுவினரும் உடன் ஓடி வந்திருக்கின்றனர். இந்த போட்டியில் தியேன் குங் அல்ட்ரா எனும் ரோபோட் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும் 42 விநாடிகள் நிற்காமல் ஓடி இறுதி கோட்டை எட்டியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ரோபோவாக இது இருக்கிறது. சிறந்த வடிவமைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த போட்டி நடந்திருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு போட்டியாக வரும் என்பது தெரிந்த விஷயம்தான் ஆனால். இவ்வளவு சீக்கிரமாக போட்டியாக வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் அத்தனை வேலையையும் இந்த ரோபோக்களால் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. இப்போது விண்வெளி துறையில் இந்த ரோபோக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக செவ்வாய் போன்ற கிரகங்களில் இறங்கி மனிதர்களை போல நடந்து சென்று, ஆய்வு செய்வதற்கு இந்த ரோபோக்களின் உதவி தேவை.
எனவே இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பாக, விண்வெளி ஆய்வுக்கு என தனிப்பட்ட முறையில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் இவை மனிதர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முன்னோட்டமாக இந்த போட்டி இருக்கிறது. இதைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications