Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி+குரு+ராகு கேது.. 2024ல் கதவை தட்டும் ராஜயோகங்கள்.. 7 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வாழ்க்கையில் நல்லது நமக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும் என்று ஏங்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். நிம்மதியாக தூங்கி எத்தனையோ வருஷமாச்சு, கடன் தொல்லை, உடல் ஆரோக்கியத்தில் ஓயாத பிரச்சினை என்று கஷ்டப்படுபவர்களுக்கு இந்த புத்தாண்டு புதுமையை தரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் யாரெல்லாம் வாழ்க்கையின் உச்சத்தை தொடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

சனி பகவான்: 2024 ஆம் ஆண்டில் நவகிரகங்களின் சனி, குரு, ராகு கேது கிரகங்கள் சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகின்றனர். ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். மன்னராக இருப்பவர்கள் முடி துறந்து நாடு இழந்து நளன் போல அலைய வேண்டியதுதான். 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார்.

2024 New year rasi palan: Puthandu Rasi Palan These 7 zodiac signs life changes

குரு பகவான்: பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ குருவின் அருள் தேவை. நவ கிரகங்களின் குரு பகவான் தனது சஞ்சாரத்தினால் பல நன்மைகளை செய்வார். நமக்கு கஷ்டங்கள் தீர வேண்டும் நாமும் வாழ்நாளில் ஒருநாளாவது கோடீஸ்வரன் ஆக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். குருவின் அருளால் 2024ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகிறது.

மேஷம்: 2024ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். குரு பகவானின் பயணம் குதூகலத்தை தரப்போகிறது. சனி பகவான் லாப ஸ்தானத்தை கொடுப்பதால் பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோகத்தை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கப் போகிறது. 2024ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.

சிம்மம்: குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பு. அற்புதமான யோக நிலை. குரு பார்வை சிம்ம ராசியின் மீது விழுகிறது. சனிபகவான் பார்வையும் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது. சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் சச மகா யோகம் கிடைத்துள்ளது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. பண மழை பொழியப்போகிறது. 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைகிறது. மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் தொழில் குருவாக இடப்பெயர்ச்சி அடைந்தாலும்

கன்னி: கன்னி ராசிக்காரர்களே அஷ்டம குருவாக பயணம் செய்தாலும் மே மாதம் முதல் குரு ஒன்பதால் வீட்டிற்கு சென்று உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். அதே போல சனிபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து ஆண்டு முழுவதும் பயணம் செய்வது அற்புதம். செய்யும் தொழிலில் லாபம் வரும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் நஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் 2024ஆம் ஆண்டில் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.

துலாம்: குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு சென்றாலும் அச்சப்பட வேண்டாம். குருவின் பார்வையால் திடீர் பணவரவு வரும். பதவி இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். சனி பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். ராகு கேது உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

விருச்சிகம்: செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. 2024 ஆம் ஆண்டில் குரு பகவான் ஆறாம் வீட்டில் இருந்து 7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. நான்காம் வீட்டில் சனி அமர்ந்து சச மகா யோகத்தை தரப்போகிறது. பல ஆண்டுகாலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது. 2024 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

தனுசு: சனி பகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார். பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள். 2024ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.

மீனம்: சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம். குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் அமர்ந்து பயங்கர லாபத்தை தருகிறார். 2024ஆம் ஆண்டில் ஜென்ம ராகு, சனி, குரு கிரகங்கள் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் லாபத்தை கொட்டிக்கொடுக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+