இதுதான் தீபாவளி பரிசு – மேஷ ராசிக்கு அடிச்சுது பாருங்க யோகம்
தீபாவளி சிறப்பு பலன் மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மேஷம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் மேஷ ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்கு குரு பகவான் நான்காம் இடத்திற்கு வருகிறார். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற ஏற்றங்கள் கிடைக்கும். தொழிலிலும் அதி அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். மனதில் நினைத்தபடி உயர்கல்வி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதாரம் உயரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தீபாவளி பரிசாக திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
சொந்த வீடு, நகை
சொந்த வீடு கனவு நனவாகும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. சிலர் ஆசைப்பட்ட படி பைக், கார் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகி, மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி பண்டிகையையொட்டி நிறைய நகை வாங்குவதற்கான சூழல் உள்ளது. குடும்பத்தினருடன் தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட காலமாக திட்டமிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
கவனம்
சுக்கிரன் நீட்சமாக இருப்பதால் வாழ்க்கை துணையுடன் சங்கடங்கள் ஏற்படும். எனவே வீண் விவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் பிரியும் நிலை கூட வரலாம். வீண் விரயம் ஏற்படும் என்பதால் நிதியை கவனமாக கையாள வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். சிலருக்கு குழந்தைகளை பிரிந்து தூரமாக செல்லும் நிலை ஏற்படும்.
பரிகாரம்
உத்யோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே பணிகளை தெளிவாக திட்டமிட்டு முடிக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும். முடிந்தால் வயதான முதியவர்களுக்கு தங்களால் முடிந்த தானங்களை வழங்குவது நற்பலன்களை கொடுக்கும். அன்னதானம் செய்வது கூடுதல் சிறப்பு.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications