சிவபெருமானின் அருளால் ராஜயோகம் பெறும் 5 ராசியினர் யார் தெரியுமா?..உங்க ராசி இருக்கா

Subscribe to Oneindia Tamil

Maha sivarathiri 2025: மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த புனிதமான நாளில் ஈசனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றமடையப் போகும் 6 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

அண்ட சராசரங்களையும் ஆளும் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி தினமானது 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் சிறப்பு மகா சிவராத்திரியாக இந்த சிவராத்திரி கருதப்படுகிறது. சிவ பக்தர்கள் அனைவரும் சிவனை நோக்கி விரதமிருந்து, முறையான வழிபாடு செய்தால் சிவனின் அருளும், ஆசியும் கிடைக்கும். அனைத்து ராசிக்காரர்களுக்கு சிவ பெருமானின் கருணை கிடைக்கும்

Maha sivarathiri 2025 lucky zodiac signs Astrology

இருப்பினும் ஜோதிடவியலின் அடிப்படையில், இந்த ஆண்டில் வரும் சிவராத்திரி தினத்தன்று கிரக நிலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாகவும், கோச்சாரங்களினாலும் 5 ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி கோள்களின் மாற்றம் காரணமாக ஈசனின் அருள் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிவராத்திரி தினம் முதல் அடுத்த ஓராண்டுக்கு இவர்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்றும், இவர்களுக்கு இயல்பாகவே சிவனின் ஆசி கிடைக்கவுள்ளதால் வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பமயமாக மாறப் போகிறது. ஈசனின் அருளால் ராஜ வாழ்க்கை வாழப்போகும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் பிறப்பிலேயே சிவபெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி தினத்தன்று உங்களுக்கு சிவனின் கடாட்சம் பூரணமாக கிடைக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்து வந்த அனைத்துப் பிரச்சனைகளும், துன்பங்களும் விலகும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். மேஷ ராசியினர் பிறப்பில் இருந்தே சிவ பக்தர்களாக பெரும்பாலும் இருப்பதால் பார்வதி தேவியின் ஆசியும் பூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மனதார சிவனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சிவன், பார்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கப் போகிறது. வாழ்வில் இதுநாள் வரை இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை, காதல் வாழ்க்கையில் இருந்து வந்த இடையூறுகள் விலகும். தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வரும் சிவராத்திரி தினத்தன்று ஈசனுக்கு வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கடகம்: ஜோதிட விதிகளின்படி பார்வதி தேவியின் அம்சம் பொருந்திய ராசி என்று கூறப்படுகிறது. இதனால், இந்த சிவராத்திரி தினத்தன்று உங்களுக்கு பார்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஈசனின் பார்வையும் உங்கள் ராசியின் மேல் விழுவதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணம் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். செல்வம் குவியும் வாய்ப்புள்ளது.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்த நபர்களுக்கு நல்ல யோக பலன்கள் கிடைக்கும். ஈசனின் பார்வையால் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் உணர்வும் உண்டாகும். நினைத்து இழுபறியாக இருந்து வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வரும் சிவராத்திரி முதல் நல்ல காலமாக இருக்கும். சிவ வழிபாடு, சிவ மந்திரங்களை ஜெபிப்பது நல்ல பலன்களைத் தரும்.

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிவன் மீதும், சிவ வழிபாட்டின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். சிவ அம்சம் பொருந்திய ராசியாக கும்ப ராசி கருதப்படுகிறது. அதனால், இந்த ஆண்டில் வரும் சிவராத்திரி தினத்தில் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். சிவ வழிபாட்டை மனமுவந்து செய்து வந்தால் அதீத நற்பலன்களைப் பெறுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+