விபரீத யோகம் அடிக்கும்.. கல் எல்லாம் பொன்னாகும் காலம்! கடக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்
சென்னை: 2025ம் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில்.. கடக ராசி நேயர்களுக்கு வாழ்க்கை அடுத்த 1 வருடம் எப்படி இருக்கும்? உங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
புத்தாண்டு என்பது புதிய காலெண்டர் வாங்கும் தினம் மட்டுமல்ல... அது புதிய வாய்ப்புகளுக்கான வருடம். ஒரு வருடம் முழுக்க கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் மேலே வந்த கதையும் இருக்கிறது.. மேலே இருந்தவர்கள் எல்லாம் பாதாளத்திற்கு சரிந்த கதையும் இருக்கிறது. 1 வருடத்தில் ஒருவருக்கு என்னவேண்டுமானாலும் நடக்கும். அதிலும் அடுத்த வருடம் நிறைய பெயர்ச்சியில், திசை மாற்றங்கள் நடக்க உள்ளன.

2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். அந்த வகையில் கடக ராசி நேயர்களுக்கு அடுத்த 1 வருடத்தில் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம் .
ஏற்றம் ஏற்படும் விஷயங்கள்:
1. உடல் பிரச்சனைகள் தீரும்: இத்தனை காலம் உங்களுக்கு இருந்த நோய்கள் குறையும். கிட்னி பிரச்சனைகள் தீரும். இதய பிரச்சனைகள் இருந்தவர்களின் உடல் தேறும். கேன்சர் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு கீமோ சிகிச்சை முடியும் வாய்ப்புகள் உள்ளன.
2. திருமண யோகம் கைகூடும்: திருமணம் கைகூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வருடம் திருமணம் நடக்கவில்லை என்ற சிக்கலில் இருந்தவர்கள் கண்டிப்பாக 2025ல் திருமணம் நடக்கும்.
3. உத்தியோக உயர்வு ஏற்படும்: 2025ல் கண்டிப்பாக பணி உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்த ஆன்சைட் மாற்றங்கள், தேர்வு எழுதி உயர் பதவிக்கு செல்லும் வாய்ப்புகள் வரும். வெளிநாட்டு வேலைக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன.
4. வீடு கட்டும் வாய்ப்பு வரும்: சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. இத்தனை காலம் வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்லலாம்.
5. லாட்டரி அடிக்கும்: லாட்டரி அடிக்கும் யோகம் உண்டு. விபரீத யோகம் என்பார்களே.. அப்படி உங்களுக்கு எதிர்பார்க்காத யோகம் அடிக்கும்.
சறுக்கல் ஏற்படும் விஷயங்கள்:
1. கடன் பிரச்சனை ஏற்படலாம்: கடன் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. தேவையின்றி கடன் வாங்க வேண்டாம். முக்கியமாக லோன் மேல் லோன் எடுக்க வேண்டாம்.
2. வழக்கு பிரச்சனைகள் வரலாம்: வழக்குகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சிலருக்கு கிரிமினல் வழக்கில் கூட சிக்கும் அபாயம் உள்ளது.
3. விபத்து ஏற்படலாம்: வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். விபத்து ஏற்படலாம். பைக்கில் வேகமாக செல்ல வேண்டாம். போட்டி போட்டு செல்வதை தவிர்க்கவும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1. காதலில் கவனம் வேண்டும்: காதல் செய்வதில் கவனம் தேவை. அவசரப்பட்டு யாரிடமும் காதலில் விழ வேண்டாம். கவனமாக இருக்கவும்.
2. அவசரப்பட்டு உதவ வேண்டாம்: யாருக்கும் அவசரப்பட்டு உதவ வேண்டாம். அதாவது கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி தருவது.. நண்பர்களுக்கு உதவி செய்கிறேன் என்று வட்டிக்கு கடன் வாங்கி தருவது எல்லாம் வேண்டாம்.
3. முதலீட்டில் கவனம் தேவை: முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். தினசரி முதலீடு மார்க்கெட்களை தவிர்க்கவும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications