2025 தை மாத ராசி பலன்: கன்னி ராசியை வெச்சு செய்யப் போகுது.. கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
தை மாத ராசி பலன்: சிம்ம ராசியின் ஆறாம் இடத்தில் சூரியன் இருப்பதால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் இந்த தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் அமோகமான பலன்களைத் தரப் போகிறது. வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் ஜாதகத்தில் 9 ஆம் இடத்தில் வியாழன் கிரகம் இருப்பதால் அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.

9 ஆம் இடத்தில் இருந்து கொண்டு 3 ஆம் இடத்தை வியாழன் கிரகம் வீற்றிருக்கிறார். குரு பார்க்கின்ற இடத்தில் வலிமையை சேர்ப்பார் என்பதால் உங்களுடைய புத்திசாலித்தனம், கடுமையான உழைப்பு, நியாய தர்மத்தை கையில் வைத்துக் கொண்டு ஓடுகிற ஓட்டம், பொறுப்புகளை சுமப்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் புதிய உத்வேகத்தைப் பெறுவீர்கள்.
ராசி நாதன் புதன் பகவான் 5 ஆம் இடத்தில் வீற்றிருக்கிறார். இதனால், உங்கள் பொறுப்பை மீறி உங்களிடம் வேலையை எதிர்பார்ப்பார்கள். பொறுப்புகள், வேலைகள், வேலைப் பளு அதிகரிக்கும். எனவே, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த விஷயங்களானாலும் கோபப்படாமல் நிதானமான இருப்பது நல்லது. இதனால் பயப்படத் தேவையில்லை. உங்கள் ராசியை குரு பார்ப்பதால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
12 வது பாவ அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் ஐந்தாம் விடத்தில் வீற்றிருக்கிறார். 12 வது இடம் என்பது அயன, சயன, போக பாக்கியங்கள் உண்டாவதால் யோகங்கள் உண்டாகும். கெட்டபெயர் வாங்குவது, நொடிந்து போவது, கஷ்டப்படுவது, தூக்கம் வராமலும் தவிப்பது உண்டாகும். குடும்பத்தில் என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுபோன்ற மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். இவை எல்லாமே இந்த 30 நாட்களுக்கு மட்டுமே சந்திப்பீர்கள்.
பிள்ளைகள் சொல்வதை கேட்பதில்லை. பெற்றோர் மதிப்பளிப்பதில்லை. சில குடும்பத்தில் வேற்றுமைகள், வேறுபாடுகள், கணவன், மனைவிக்கிடையே எண்ண முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் செல்லும்போது அவர் நன்மைகளை செய்வார் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் 11 ஆம் இடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு விவசாயம், இயற்கை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைப்பதில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் இருக்க கூடிய வியாழன் கிரகம் 5 ஆம் இடத்தை பார்ப்பதால் வெளியூர், வெளிநாடு பயணம் நல்ல பலனைத் தரும்.
சுற்றுலா செல்வது, வெளியூர், வெளிநாடு செல்வது, ஆன்மீக பயணம், தீர்த்தவாரி செல்வது போன்ற யோகங்கள் உண்டாகும். ஒரு பக்கம் குரு பகவான் 5 ஆம் இடத்தை பார்ப்பது திடீர் திருமண வாய்ப்புகள் உண்டாகும். இதுவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தவர்கள் கூட திருமணம் செய்துகொள்ள ஒப்புதல் அளிப்பீர்கள்.
குதூகலமான அனுபவங்கள் உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் ஒரு பக்கம் உங்களுக்கு வேலைப் பளு, பொறுப்புகள் கூடும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொறுப்புகள், கடின உழைப்பு, அதிக தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உண்டாகும். 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் மிகப்பெரிய உசிதம். நோய், விபத்து, கடன், சட்டம் வழக்கு போன்ற கெட்ட சம்பவங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
பயணத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் விருத்திகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், பூமி சார்ந்த தொழில், கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நிறைவான காலமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் அந்நிய தேசத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டாட்டமான காலமாக இருக்கும்.
பக்கத்தில் இருக்கக்கூடிய ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். நல்லவை எவை, கெட்டவை எவை என்பதை கண்டுணர்ந்து செயல்படுவதற்கான ஆற்றல் உண்டாகும்.












Click it and Unblock the Notifications