Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 தை மாத ராசி பலன்: தன பாக்கியத்தில் பணத்தை அள்ளும் மிதுன ராசி.. எதில் கவனமாக இருக்க வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும். அந்த வகையில், 2025 தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் அனுபவிக்கப் போகும் நற்பலன்கள் என்ன. எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Thai month rasi palan for midhunam)

மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது பாவத்தின் அதிபதியாக இருக்க கூடிய சூரிய பகவான் உங்களுக்கு எட்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார். எட்டாம் இடத்தில் ராசிநாதன் புதனும் இணைந்திருக்கிறார். சூரிய பகவானும், புதனும் எட்டாம் இடத்தில் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். சூரியனும் புதனும் ஜாதகத்தின் அடிப்படையில் 1, 7, 8 ஆம் இடத்தில் இருக்கும் நிலையில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

mesham thai month rasi palan

இரண்டு டிகிரி படிக்கும் வாய்ப்புகள் உண்டு. எழுதுகின்ற, படிக்கின்ற அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சூரியனும், புதனும் எட்டாம் இடத்தில் இருந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் தன பாக்கியம் கூடிவரும். உங்களைச் சுற்றியிருந்த அனைத்து இருள்களும் மறையும். வெளிச்சமான வாழ்க்கை உண்டாகும். இறைவனின் அருள் கிடைக்கும். (Thai madha rasi palan)

இரண்டாம் இடம் என்பது உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும், மரியாதையையும் உண்டாக்கும். ராசியில் செவ்வாய் வீற்றிருப்பதாலும், நான்காம் இடத்தில் இருப்பதாலும், சிலருக்கு அவரது குடும்பங்களில் தாய்க்கும், பிள்ளைக்கும் தர்க்க வாதங்கள் உண்டாகும். தாயின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும். நீங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து புது வீடுகளுக்குப் போவது, இயந்திரங்கள் பழுதாவது அதற்கு செலவாவது என சின்னச்சின்ன செலவினங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். (midhuna rasi palan)

நான்காம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் உணர்ச்சிவசப்படாமலும், கோபப்படாமலும் எந்த இடத்தில் காரியத்தை எப்படி சாதிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பீர்கள். இதே செவ்வாய் ஏழாய் இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏழாம் இடத்துக்கான அதிபதி 12 ஆம் இடத்தில் இருப்பதாலும், ஏழாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் புதிய தொழில் தொடங்குவது, கூட்டாளிகளுடன் இணைந்து தொழில் செய்வது, பகலெல்லாம் கடினமாக உழைக்கின்ற இடங்களில் எல்லாம் என்னையே பழிவாங்குகிறார்கள் என்று எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றும். இதனை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உடன்பிறப்புகள், தாயாதி வர்க்கங்கள், தெரிந்தவர்கள், நீண்டநாட்களாக பழகியவர்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புண்டு. அரசு துறை, கார்ப்பரேட் துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பம்சங்கள் உருவாகும் வாய்ப்புண்டு. அதேசமயத்தில் நெருப்பு சம்பந்தமான தொழில்கள், பெட்ரோல், டீசல், பட்டாசு தொழிற்சாலை, கேஸ் வியாபாரம், கெமிக்கல் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதத்தில் லாபம் பெருகும்.

இருக்கின்ற பொருள்கள், கிடங்குகள் போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய் எட்டாம் இடத்து பார்வையாக சூரியன் மற்றும் புதனை பார்க்கிறார். செவ்வாய் சூரியனைப் பார்ப்பதால் அவசர கோலத்தில் வாக்கு கொடுப்பதால் கெட்ட பெயர் எடுத்துவிட்டதை நீங்களே உணர்வீர்கள். எதையுமே அவசரப்படாமல் செய்வது நல்லது. மற்றவர்கள் பேசுவதை முழுதாகப் புரிந்து கொண்டு பேச வேண்டும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

வரி கட்ட வேண்டிய விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் அபராதம் விதிக்கும் தகவல்கள் வந்து சேரும். 12 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் ஏழாம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்ப்பதால் கடன்கள், நோய்கள், எதிரிகள், சட்ட வழக்கு துன்பங்கள் போன்ற எந்தவித பிரச்னைகளும் ஏற்படாது.

சனீஸ்வர பகவானும் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் இடமாற்றம் உண்டாகும். வெளிநாடுகள், வெளியூருக்குப் போகும் யோகம் உண்டாகும். அங்கு பணியாற்றும் வாய்ப்பு வரும். அரசு வேலைகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு வேலை கிடைக்கும். சுக்கிர பகவான் ராகு பகவானுடன் இணைந்து சுக்கிர பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். ஆண்கள் மூலமாக பெண்களுக்கும், பெண்கள் மூலமாக ஆண்களுக்கும் உதவிகள் வந்து சேரும்.

ராகுவோடு சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஊரை சுற்றி பார்ப்பது, ஆன்மிக வழிபாடு, தீர்த்த யாத்திரை, பெருமாள் சன்னிதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வாகனம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். சுக்கிரன் கேதுவை பார்ப்பதால் வயதான மனைவி, பாட்டி, தாத்தா போன்றவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

அர்த்தமாதிபதி 9 ஆம் இடத்தில் வீற்றிருப்பதால் வயதானவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது. அம்மன் ஆலயங்களுக்கு கைங்கரியம் செய்வது கூடுதல் நற்பலன்களைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+