ராஜயோகம் பெறும் 4 ராசியினர்.. சுக்கிரன், சனியின் சேர்க்கையால் தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
சனி சுக்கிரன் சேர்க்கை: மார்ச் 28 ஆம் தேதி மீன ராசிக்குள் சனி பகவான் நுழைகிறார். மீன ராசியில் ஏற்கனவே சுக்கிர பகவான் இருக்கும் நிலையில், சனி பகவான் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. சில சமயத்தில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் சில யோகங்களைப் பெறுவார்கள்.

கர்மக்காரகன், நீதிக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக் கூடியவர். ஆடம்பர கிரகமான சுக்கிரன் கிரகம் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், அழகு ஆகியவற்றிக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
சனி பகவான் மீன ராசிக்குள் மார்ச் 28 ஆம் தேதி நுழைகிறார். ஏற்கனவே அங்கு சுக்கிர பகவான் உள்ளதால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு. மீன ராசியில் சனி - சுக்கிரன் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த சனி சுக்கிரன் சேர்க்கையால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்று பார்க்கலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடியும். உத்தியோகத்தில் சிறப்பாக விளங்குவீர்கள். நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிதி ஆதாயம் காண்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண யோகம் கைகூடி வரும். திருமண வாழ்க்கை மகிழச்சி நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும்.
மீனம்: சனி சுக்கிரன் சேர்க்கையால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிதி ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து வருவீர்கள். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். நிதி வருவாய்க்கான ஆதாயங்கள் பெருகும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சுப நிகழ்ச்சிகள், மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும் காலமாக இருக்கும். குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய வியாபாரம், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அனைத்து வழிகளிலும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக்க காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications