ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம் ராசி.. குரு, சூரியனின் இணைவால் கிடைக்கப் போகும் திடீர் அதிர்ஷ்டம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
மிதுன மனைவியில் குரு பகவான் இருக்கிறார். கன்னி மனையில் செவ்வாய் பகவான் ஆடி 12 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சியாகிறார். சூரிய பகவான் கடக மனையில் இந்த மாதம் முழுதும் அமர்ந்து கொண்டு பலனை கொடுக்கப் போகிறார். கேது பகவான் சிம்மத்திலும், ராகு கும்பத்திலும் உள்ளது. சனி பகவான் வக்கிரமடைந்து மீன மனையில் இருக்கப் போகிறது.
அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியதிபதியான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு வலிமையாக அமர்ந்திருக்கிறார். ஆடி மாதம் 10 ஆம் தேதி சுக்கிரன் 9 இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தில் அமைப்பதால் அற்புதமான பாக்கியங்கள், அதற்கான முயற்சிகள், சிந்தனைகள் உங்களுக்கு கிடைக்கும். ராசிநாதன் நல்ல தன்மையில் இருக்கிறார். குருவும் 9 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. உங்கள் ராசிக்கு 6க்கு உரியவர் குரு. அதவாது கடன், நோய், பகை, எதிர்ப்பைத் தரக்கூடிய குருவுடன், சுக்கிரன் இணைகிறார்.
ஆரோக்கியம்
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்கு தொடர்பான நெகட்டிவான விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அலைச்சல், மன அழுத்தம், வேலைப் பளு இருக்கும். குரு, சுக்கிரன் இணைவு பெற்றுள்ளதால் பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தொழில், வேலையில் அழுத்தம் இருந்தாலும் பண வரவுக்கு எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், லாபாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியுடன் இணைந்துள்ளதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சிறப்பு பெறும்.
குடும்பம்
குடும்ப விஷயத்தில் மட்டும் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யத்தை குறைத்துவிடும் பாதிப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். சூரிய பகவான் வலிமையாக உள்ளதால் நினைத்ததை செயல்படுத்தும் எண்ணங்கள் தோன்றும். சிந்தனைகள் சிறப்பாக இருக்கும். நல்ல பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரம் சிறப்பு பெறும். புத்திசாலித்தனம், பேச்சில் இனிமை உண்டாகும்.
வீடு, வண்டி யோகம்
இடத்திற்கு தகுந்தாற்போல செயல்படும் தன்மை உண்டாகும். உள்ளுணர்வு திறனைப் பெறுவீர்கள். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகத்தைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுத்து மாற்றங்களைச் செய்வீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
தடை நீங்கும்
கடனை வாங்கி படிக்கும் சூழல் உண்டாகும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். வெளிநாட்டு அமைப்பு, அண்டை மாநிலத்துக்கு, மாவட்டத்துக்குச் சென்று படிப்பது போன்ற சிந்தனைகள், யோகங்கள் உண்டாகும். குருவின் பார்வை ராகுவுக்கு கிடைப்பதால் குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி, குழந்தை பாக்கியத்தைப் பெறுவீர்கள். இதுவரை உங்களை கெடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி நல்லவையாக மாறும்.
திடீர் அதிர்ஷ்டம்
வேலையில் அழுத்தம், பளுவை சந்தித்து வந்தவர்களுக்கு அந்த தன்மை மாறும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மன உளைச்சல்கள் நீங்கும். திடீர் யோகங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். தந்தையின் உடல்நலனில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் அதிகாரம், நிர்வாகம் உங்களுக்கு கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.
தொழில்
9, 11 ஆம் அதிபதி இணைந்துள்ளதால் தொழில் ரீதியாக நல்ல பாக்கியங்கள், ஒப்பந்தங்கள், சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். செவ்வாய் பகவான் கடந்த சில மாதங்களாக நீச்சமாக இருந்த நிலையில் கேதுவுடன் இணைந்துள்ளதால் சகோதரருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வம்பு, வழக்கு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் முடித்துவிடும் சிந்தனை உருவாகும். குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். உங்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தும் சிறப்பு பெறும்.












Click it and Unblock the Notifications