Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு செய்தவர்களை தட்டிக்கேட்கும் ஆனைமலை மாசாணியம்மன்..மிளகாய் அரைத்து பூசி முறையிடும் நீதிக்கல்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆனைமலை மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குகிறாள். ஆலயத்தில் நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் வேண்டினால் அது நியாயமானதாக இருந்தால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை தருவாள் மாசாணியம்மன். தீங்கு செய்யும் பகைவர்களை, மாசாணி அம்மன் தண்டிக்காமல் விட்டதில்லை. பில்லி, சூனியம், எந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையில் பாதிக்கப்பட்டவர்களும் பொருட்கள் திருட்டு போனவர்களும், மிளகாய் அரைத்து நீதி கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டினால் தப்பு செய்தவர்களை மாசாணியம்மன் தண்டிக்காமல் விட்டதில்லை.

கோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் பெற்றாள். ஸ்ரீ ராம பிரான் உப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார்.

ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள். இப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசணியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள். மயான சயனி என்ற பெயர் மருவி நாளடைவில் மாசாணியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

தலவரலாறு

தலவரலாறு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான். ஒருநாள், ஆழியாற்றில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.

 நம்பிக்கை வேண்டுதல்கள்

நம்பிக்கை வேண்டுதல்கள்

பதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசணியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது.

எதிரிகளை அழிக்கும் வேண்டுதல்

எதிரிகளை அழிக்கும் வேண்டுதல்

தீ மிதித்து வேண்டுதல் வைப்பார்கள், பால்குடம் எடுப்பார்கள், காவடி எடுப்பார்கள். ஆனால் எரியும் மிளகாயை துவையலாக அரைத்து பூசி வேண்டுதல் வைக்கின்றனர் மாசாணியம்மனிடம். மிளகாய் காரம், எதிரிகளை அழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இங்கே வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது.

 மிளகாய் அரைத்து பூசுதல்

மிளகாய் அரைத்து பூசுதல்

பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.

அம்மன் தண்டனை நிச்சயம்

அம்மன் தண்டனை நிச்சயம்

மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைச்சு போட்டா, தப்பு பண்ணவங்களை, அவ சும்மா விட மாட்டா. அவுங்க படுக்கையில விழுந்துடுவாங்க. அந்த அளவுக்கு மாசாணி ஆத்தா உக்கிரமானவ என்று எச்சரிக்கின்றனர் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம மக்கள். எதிரியின் மீதுள்ள கோபத்தை பொறுத்து கால் கிலோ, அரை கிலோ, 1 கிலோ என பக்தர்கள் மிளகாய் அரைக்கிறார்கள்.

எண்ணெய்க்காப்பு

எண்ணெய்க்காப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் இக்கோயிலுக்கு ஏராளமானோர் வந்து மிளகாய் நேர்த்திக்கடனை பக்தியோடு நிறைவேற்றுகிறார்கள். இந்த நேர்த்திக்கடனை செலுத்துதற்காக வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை நாட்களில் பெண்கள் கூட்டம் கோயிலில் அலைமோதுகிறது. ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து, வெளிப்புறத்தில் இருக்கும் நீதிக்கல்லில் கார மிளகாயை அரைத்து பூசுகின்றனர். மிளகாய் அரைத்து நீதி நிறைவேற்றிய பின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு நடத்தி மகிழ்கின்றனர்.

அருள் தரும் மாசாணி அம்மன்

அருள் தரும் மாசாணி அம்மன்

இக்கோயிலில் பச்சியம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள் இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக் கொள்ள தீவினைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும். இத்திருக்கோயிலில் வேண்டுதல் முறையானது சிறப்பான வழிபாடாகும். பக்தர்களுக்கு தங்கள் வாழ்வில் எந்தெந்த விதமான வேண்டுதல்கள் உள்ளனவோ அதனை ஒரு சீட்டிலே எழுதிக் கொடுத்தால் அதனை அம்மனின் கையிலே கட்டிவிடுவார்கள். அக்கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தி மகிழ்வது திருக்கோயிலின் சிறப்பாகும்.

 வரம் தருவாள் மாசாணி அம்மன்

வரம் தருவாள் மாசாணி அம்மன்

மாசாணி அம்மனுக்கு செவ்வரளி உதிரிப்புமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட பெண்கள்களுக்கு உடல் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+