ஆனி மாத ராசி பலன் 2025: மேஷ ராசிக்கு அற்புத யோகம்.. அதிர்ஷ்டம் பணம் கொட்டும்.. ஒரு விஷயத்தில் கவனம்
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருப்பதால் விசேஷமான காலகட்டமாக இருக்கும். 1, 5, 9 ஆம் இடம் என்பது மகாலட்சுமி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ராசிநாதனோ, 5 ஆம் அதிபதியோ, 9 ஆம் அதிபதியோ இருந்தால் மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுடைய ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருப்பதால் பெரிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
வெற்றி
குழந்தைகள் மூலமாக ஏற்றங்கள் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுடைய அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதற்கான வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். 5 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஏற்றத்தைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
திருமணம், குழந்தை
இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாமல் நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பிராப்தம் உண்டாகும். ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருந்து, 7 ஆம் இடத்தை பார்ப்பதால் திருமண பாக்கியம் நிச்சயமாக கைகூடும் காலமாக இருக்கும். வருட கிரகங்கள் அனைத்துமே இந்த மாதத்தில் சாதகமாக இருக்கிற காலகட்டமாக உள்ளது.
தொழில்
சனியும், ராகுவும் சேர்ந்து 11 ஆம் இடத்தில் இருந்தால் தொழிலில் அபரிமிதமான மாற்றங்கள், ஏற்றங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். மாத கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களில் சூரியன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருப்பதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கட்டாயம் நடக்கும்.
பாக்கியம்
பெரிய பதவி, புகழ், அந்தஸ்து, கெளரவம் உண்டாகும். 5 ஆம் அதிபதி 5க்கு 11 இல் இருப்பது பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுக்கும் காலமாக இருக்கும். எழுத்துப் பணி, கலைத் துறை, மருத்துவர்கள், ரத்த சம்பந்த விஷயங்கள் பார்ப்பவர்கள், மண், இரும்பு தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
ராசியில் சுக்கிரன் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் சீரான அமைதி இருக்கும். ஜூன் 29 ஆம் தேதி ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் போவது பெரிய விசேஷமாக இருக்கும். இதன் மூலம் தன ஸ்தான அதிபதி சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இருப்பதால் பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. ஏற்றமான காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும்.
கவனம்
பேச்சினால் அனைவரையும் கவரும் வாய்ப்பு உண்டாகும். ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருக்கும் புதன் 4 ஆம் இடத்தில் போகிறார். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் அனைத்தையும் வெற்றியைத் தரும். முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களைத் தடுக்கும். ஜூலை 6 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
ஏற்றம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த ஏற்றமான காலகட்டமாக இருக்கும். உங்களுடைய அபிலாஷைகள் அனைத்தும் நடக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு, தந்தையினால் ஏற்றமும் உண்டாகும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.












Click it and Unblock the Notifications