துலாம் ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இனி வெற்றிமேல் வெற்றி வந்து குவியப் போகுது
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
சித்திரை, ஸ்வாதி, விசாகம் ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது துலாம் ராசி. ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு வருட கிரகங்களான சனி, ராகு, கேது, குரு ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் அற்புதமாக நடக்கும். உங்கள் ராசிநாதன் ராசியையே பார்ப்பதால் அனைத்து விதமான ஏற்றமும் உண்டாகும்.
வெற்றி
7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் உங்கள் ராசியை சமசப்தம பார்வையில் பார்க்கிறார். குருவின் பார்வையும் உள்ளது. ஜூன் 29 ஆம் தேதி வரையும் இரண்டு சுப கிரகங்களும் உங்களுக்கு அதீத சுபத்துவத்தைக் கொடுக்கப் போகிறது. உடல் நிலையில் நல்ல ஏற்றம் உண்டாகும். தீர்க்கமான சிந்தனை உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
வெளிநாடு யோகம்
சுக்கிரன், குருவும் இணைந்து பார்ப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயமாக நடக்கும். 9 ஆம் இடத்தில் குரு இருப்பதால் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும். உங்களுக்கு வந்து சேர வேண்டியவை அனைத்தும் வந்து சேரும். தந்தையின் மூலமாக அதீத லாபம் வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஏற்றம்
9 ஆம் இடத்தில் சூரியன் குரு புதனுடன் சேர்ந்திருப்பதால் அனைத்துவிதமான ஏற்றமும் உண்டாகும் மாதமாக இருக்கும். 9 ஆம் இடத்தில் புதன் ஆட்சி பெற்றிருக்கிறார். குரு, சூரியன் 9 இல் இருப்பதால் பெரிய விசேஷம் உண்டாகும். பாக்கியங்கள் அபரிமிதமாக கிடைக்கும். ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு செல்லும்போது புதிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புத்திர பாக்கியம்
ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு வந்து பார்ப்பதால் புத்திர பிராப்தம் உண்டாகும். 5 ஆம் அதிபதி 5 ஆம் இடத்தில் இருக்கிறார். குருவின் பார்வையும் இருக்கிறது. சுக்கிரன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் நல்ல ஏற்றமான காலமாக இருக்கும். ஜூன் 29 ஆம் தேதி 8 ஆம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்.
மாணவர்கள்
படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 முதல் 24 ஆம் தேதி வரையிலான சந்திராஷ்டம காலத்தில் பயணங்கள், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அருகில் இருக்கும் கோயிலில் துளசி செடியை வாங்கிக் கொடுப்பது நல்லது. முயற்சிகள் கைகூடும். தொழிலில் அபரிமிதமான ஏற்றமும் லாபமும் உண்டாகும்.
பண வரவு
பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் மிகுந்த வெற்றி கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications