ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் கன்னி ராசி.. திடீர் யோகம், அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப்போகுது
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் தெய்வ வழிபாடுகள் ஏற்றத்தை தரும். அடிவயிறு, ஜீரணக் கோளாறுகள், லிவர் பங்ஷன் டெஸ்ட், கிட்னி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கும் குருவின் வீட்டில் சூரியன் வந்திருப்பதால் ஜெயம், அனுகூலம், சந்தோஷம், பண வரவு, பணத்தில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும்.
தடைகள் நீங்கும்
பதவி உயர்வுகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பதவி உயர்வு, வெளிநாட்டுக்குச் செல்லும் பிராப்தம் கிடைக்கவில்லை என்பவர்களுக்கு அதற்கான அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். மன அழுத்தத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
யோகம்
சுப காரியங்கள் கைகொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரக்கூடிய யோகம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அனுகூலங்கள் ஏற்படும். பணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த அனைத்து விதமான பாதிப்புகளும் நிவர்த்தி ஆகும். திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும்.
அனுகூலம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். பழைய கடன்களை தீர்க்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் பெரிய அளவு சந்தோஷமும், நிம்மதியும் ஏற்படுவது ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
மாற்றங்களால் அதிர்ஷ்டம்
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் என விரும்பிய மாற்றங்கள் அனைத்தும் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். வளர்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications