சிம்ம ராசிக்கு சூரிய பகவானால் கிடைக்கும் திடீர் அதிர்ஷ்டம்.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

Simmam lucky zodiac signs

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். ரத்த அழுத்தம், மயக்கம், கழுத்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிப்பாக அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு நல்ல விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

பயணங்கள்

குடும்பத்தாருடன் தொலைதூரப் பயணங்களோ, காதல் அமைப்பில் தொலைதூரப் பயணங்களோ இனிமையை ஏற்படுத்தும். நீங்கள் சொல்வதை துணை கேட்கும் சூழல் உண்டாகும். பெற்றோர், பெரியோர் பெரிய அளவுக்கு அனுகூலத்தைப் பெறக்கூடிய மாதம். அதனால் பிள்ளைகளுக்கு, பெற்றோர் பெரியோர்களால் ஏற்படக் கூடிய நல்ல அமைப்பு உண்டாகும்.

சிக்கல்கள் தீரும்

மனதில் இதுவரை இருந்த பாரங்கள் குறையும். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக, படிப்பு ரீதியாக முயற்சிகள் எல்லாம் பெரிய அளவு சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆதாயம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள், பாதிப்புகள் தீரும்போது மனதில் இருந்து வந்த பாரங்கள் குறையும், வேற்று மொழிகாரர்களால் அதிக அளவில் ஆதாயதத்தைப் பெறுவீர்கள், உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணத்தை மேற்கொள்வதால் மிகப்பெரிய நிம்மதியும், 15 வருடங்களுக்கான கனவுகள் நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டாகும்.

லாபம், முன்னேற்றம்

அந்தப் பயணத்தில் ஆத்ம ரீதியான அமைப்போ, தெய்வ மார்க்க பயணங்களோ, நட்பு ரீதியான பயணங்களோ உங்களை மேன்மை அடைய வைக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் திடீர் முடிவு எடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழில், மற்ற தொழிலில் இருப்பவர்களும் லாபம், அனுகூலத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+