ஆவணி மாத ராசி பலன் 2021 - மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும்

ஆவணி மாதத்தில் நவகிரகங்களில் முக்கிய இடப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமமும் யோகமும் தேடி வரப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியனுடன் செவ்வாய் புதன் பயணம் செய்கின்றனர். ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகரத்தில் சனி வக்ரம், கும்ப ராசியில் குரு வக்ரம் என கிரகங்களின் சஞ்சாரம் எல்லாம் உள்ளது. நவ கிரகங்களின் சஞ்சாரம், இடப்பெயர்ச்சி மற்றும் கிரகங்களின் கூட்டணி பார்வையால் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் ஆவணி 10ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். ஆவணி 20ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஆவணி 29ஆம் தேதி குரு மகர ராசிக்கு திரும்புகிறார். மாத பிற்பகுதியில்
ஆட்சி பெற்ற சூரியன், உச்சம் பெற்ற புதன், ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆட்சி பெற்ற சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

Aavani matha Rasi Palan 2021 : Mithunam and Kadaga Rasi Peridiction

இந்த மாதத்தில் ஓணம் பண்டிகை, ஆவணி அவிட்டம், ஸ்ரீ சனி ஜெயந்தி, கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி,கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. பண்டிகைகள் நிறைந்த இந்த மாதத்தில் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றனர். வேலையில் குழப்பம் இருந்தாலும் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். நல்ல வேலை கிடைக்கும் வேலையில் புரமோசன் தேடி வரும்.

உங்கள் ராசி நாதன் புதன் இந்த மாதத்தில் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போவது சிறப்பு. பத்ரா யோகம் ஏற்படப்போகிறது. உச்சம் பெற்ற புதனின் பார்வை ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுவது சிறப்பு. புதன் சுக்கிரன் இணைந்திருப்பதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும் பெரும் செல்வம் தேடி வரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு அதிர்ஷ்டம் தேடி வரும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கை அமையும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம் உயர்கல்வியில் சிறப்பான நிலை ஏற்படும். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். மாணவர்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடும்.

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வருமானம் பெருகும். கடன் பிரச்சினை நீங்கும். கடன் கொடுத்த பணம் வீடு தேடி வரும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷம் அதிகரிக்கும். காதல் கைகூடி வரும் காலமாக உள்ளது. அஷ்டமத்து சனியால் சில தடை தாமதங்கள் வரலாம் கவனம் தேவை. எட்டாம் வீட்டிற்கு குரு இடப்பெயர்ச்சியாகிறார். சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்களின் தனித்தன்மையை உணர்வீ ர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாகவும் இருப்பது நல்லது. வாகனங்களில் போகும் போது வேகமாக செல்ல வேண்டாம். திடீர் விரைய செலவுகள் வரலாம் கவனம் தேவை. பொறுப்பு அக்கறையுடன் செயல்பட்டால் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, லாப வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புதன் இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரன் மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியில் உள்ள செவ்வாய் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தன காரகன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு கூடும் சுப செய்தி வீடு வந்து சேரும்.

சூரியனுடன் இரண்டாம் வீட்டில் செவ்வாய் புதன் இணைந்திருப்பதால் பேச்சிற்கு மதிப்பு கூடும் வாக்கு பலிதமாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் அதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. கைக்கு வரும் பணத்தை பத்திரப்படுத்துங்கள்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெகுமதிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர்பதவிகள் தேடி வரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வீட்டில் விசேஷங்கள் நடைபெறும். பெரிய மனிதர்கள் வீட்டிற்கு வருவார்கள்.

குரு பகவான் மாத இறுதியில் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருவின் பார்வை மீண்டும் உங்கள் ராசிக்கு கிடைக்கப் போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வையால் திருமணம் கைகூடி வரப்போகிறது. திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். குடும்பத்தில் மங்கலகாரியங்கள் அதிகம் நடைபெறும். சித்தர்கள் சமாதிக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. பிராத்தனைகள் நிறைவேறும் நேரம் கை கூடி வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+