Kumbam rasi palan: கும்ப ராசியினரே ஜொலிக்கப் போறீங்க.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்கு 6 ஆம் வீட்டுக்கு குரு பகவான் வருகிறார். குரு பார்வை தன ஸ்தானத்துக்கு இருப்பதால் பண வரவு, பொருளாதார வளர்ச்சி உண்டாகும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக யோகம் உண்டாகும். குரு பார்வை பெற்று சனி பார்வையும் பெறுவதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். லாபங்கள் அதிகரிக்கும். தெய்வ அனுக்கிரகங்கள் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். செவ்வாய் விருச்சிகத்துக்கு வருவதால் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விஷயங்களிலும் ஜெயம் பெறும் யோகம் உண்டு. சகோதரர்களிடையே ஒற்றுமைகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். 10க்கு உடையவர் 10இல் இருப்பதால் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
லாபம்
புதிய நபர்களின் தொடர்பு ஏற்படும். அதன் மூலமாக நல்ல லாபம் ஏற்படும். சுக்கிரன் நீசம் பெறுவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உண்டு. தாய், தந்தையரை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படும். சுக்கிரன் 16 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி பலம் பெறுவதால் தந்தையின் மூலமாக உதவிகள் கிடைக்கும். தெய்வ அனுக்கிரகங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
சொத்துகள் கிடைக்கும்
தாய், தந்தையின் சொத்துகள் கிடைக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் ராசியில் இருந்தாலும் குரு பார்வை பெறுகிறது. புதனும் இதே இடத்துக்கு குரு பார்வையில் வருவதால் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்களுடைய தொழிலை குழந்தைகளுக்கு கொடுப்பீர்கள். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
ராஜயோகம்
8க்கு உடையவர் 10 இல் இருப்பதால் தொழில் புதிய நபர்கள், நண்பர்கள் மூலமாக ராஜயோகம் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் உங்கள் முயற்சிகளை தெய்வம் கூட இருந்தே செய்து தருவார்கள். 7 ஆம் அதிபதியான சூரியனும் நீசமாவதால் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். நண்பர்களுக்குள் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
சுக்ராதித்ய யோகம்
சுக்கிரன் 16 ஆம் தேதிக்குப் பிறகு வரும்போது சூரியனும், சுக்கிரனும் சேர்வதால் சுக்ராதித்ய யோகம் உண்டாகும். கணவன், மனைவிக்கு யோகம் உண்டாகும். திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும். திருமணத்தில் இருந்த தடை, தாமதம் நீங்கும். கும்பத்துக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் தொழில் ரீதியான வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, பண வரவு உண்டாகும்.
வெளிநாடு யோகம்
குழந்தைகளால் இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் நிறைய யோகம் கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.












Click it and Unblock the Notifications