ஐப்பசி மாத ராசி பலன்: மேஷ ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம்.. புதிய பொறுப்புகள் தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் மேஷம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

aippasi-matha-rasi-palan-will-aries-see-career-growth-family-happiness-and-new-opportunities

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினர் கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். உறவுகளிடம் எந்த வருத்தம் இருந்தாலும் அதனைத் தவிர்த்துவிட்டு பேசுவது நல்லது.

தொழில்

தொழிலில் ஏற்றங்கள் உண்டாகும். நீங்கள் தொழிலில் பணம் போடாவிட்டாலும் கூட உங்களை நம்பி நிறைய பேர் முதலீடு செய்வார்கள். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப காரியத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தடைகள் நீங்கும். மனதில் இருந்து வந்த கஷ்டங்கள், மன அழுத்தங்கள் தீரும்.

குரு பார்வை

8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் பரிபூரணமாக நீங்கும். உங்கள் காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இறங்குவீர்கள். முடிக்காமல் இருந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். புதிய புரோஜக்ட்களை எடுத்து செய்வீர்கள். பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

வழிபாடு

பயணங்களின் போது கவனம் தேவை. பெண்களிடம் பேசும்போதும் சரி, மேஷ ராசி பெண்கள் ஆண்களிடம் பேசும்போதும் கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதிகள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வண்டிகளில் செல்லும்போது பத்திரமாகச் செல்வது நன்மை பயக்கும். தலைக்கவசம் அணிவது நன்மையைத் தரும். தலைசுற்றல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+