ஏப்ரல் மாத பலன்: ரிஷப ராசிக்கு தொழிலில் வெற்றி, லாபம்.. டும் டும் யோகம்.. இனி அதிர்ஷ்டமழை கொட்டும்
ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் கலைக்காகப் பிறந்தவர்கள். ரிஷப ராசியினருக்கு ராசியில் லாபாதிபதி குரு அமர்ந்திருக்கிறார். வர வேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும். ஆனால், சிறு தடைகளுக்குப் பின்னர் உங்களுக்கு வந்து சேரும். வீடு, சொத்து விற்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு நீங்கள் நினைக்கும் விலைக்குப் போகாமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியதிருக்கும். ராசியில் இருக்கக்கூடி குரு பகவான் உங்களுடைய பிள்ளைகளின் துணை உண்டாகும். பிள்ளைகள் தங்களது கருத்துகளை உறுதியுடன் தெரிவிப்பார்கள்.
கடின உழைப்பு
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆனாலும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் எதிர்பார்க்கும் காலகட்டமாக இருக்கும். கடினமாக உழைப்பது நல்ல பலன்களைத் தரும். வங்கித் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஆசிரியர்கள் ஒரு கல்லூரியில் இருந்து இன்னொரு கல்லூரிக்கு வேலை தேட தொடங்குவீர்கள்.
திருமண யோகம்
இந்த மாதத்தில் 2, 3 இல் செவ்வாய் பயணம் செய்வதால் திருமணம் கைகூடும். திருமணத் தடைகள் நீங்கும். 7 ஆம் வீட்டின் அதிபதி மூன்றாம் வீட்டுக்குச் செல்வது விசேஷமாகும். தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிவர்த்தியாகும். முருகனுக்குப் பாலபிஷேகம் செய்வது குழந்தை பாக்கியத்தை தரும். செவ்வாய்க்கிழமை பாலபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
தொழிலில் முன்னேற்றம்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாகம். சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும். தொழிலில் இருந்த கடுமையான தடைகள் நீங்கும். அதில் அரசு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த லோன்கள் கிடைக்கும்.
வேலை வாய்ப்பு உண்டாகும்
சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருப்பதால் கணினி துறை, ஜவுளித் துறையில் நல்ல வேலை கிடைக்கும். சனி பகவான் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் கடல் கடந்து போகும் யோகம் உண்டாகும். ஒப்பந்தப் பணி, தொழில் செய்யும் யோகம், அலுவலகத்தில் பதவி உயர்வு போன்றவை சிறப்பாக அமையும்.
கோபம் வேண்டாம்
அவ்வப்போது வரும் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். மனதில் பட்டதை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துவது நல்லது. ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்
பொல்லா பிள்ளையாரை வழிபடுவது அனைத்து விதமான நற்பலன்களையும் அள்ளித் தரும். மன அமைதி உண்டாகும்.












Click it and Unblock the Notifications