அர்த்தாஷ்டம சனியில் சிக்கும் தனுசு.. சனி அள்ளிக் கொடுப்பாரா, கெடுப்பாரா?.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்பம் வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தர மாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

Sani peyarchi Sani peyarchi palangal Viruchigam

கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 4 ஆம் இடத்துக்கு அர்த்தாஷ்டம சனியாக வருகிறார். அர்த்தாஷ்டம சனி என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தும். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. குருவின் வீட்டுக்கு வரும் சனி பெரிய கெடுதல்களைச் செய்யாது. அந்த இடத்தில் சாந்த சனியாக இருப்பார். மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் கொடுக்கப் போகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பெரிய கெடுதல்களை சனி பகவான் கொடுக்கப் போவதில்லை. சனிப்பெயர்ச்சி நடந்த 40 நட்களுக்குள் அதாவது மே 14 ஆம் தேதி நடக்கும் குருப் பெயர்ச்சியால் உங்கள் ராசிநாதன் குரு ஏழாம் இடத்தில் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு பார்வை கிடைப்பதால் ஓராண்டுக்கு யோக பலன்களைக் கொடுக்கும் அமைப்பு இருக்கும்.

சனிப்பெயர்ச்சி நடந்த 45 நாட்களில் ராகு கேது பெயர்ச்சியில் மூன்றாம் இடத்துக்கு ராகு வந்துவிடுவார். ஒன்றரை வருடத்திற்கு 3 ஆம் இடத்திற்கு வருவதும். ஒரு வருடத்துக்கு 7 ஆம் இடத்தில் குரு இருப்பதும் பெரிய அளவில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய அமைப்பாக உங்களுக்கு வரும். எனவே, அர்த்தாஷ்டம சனியால் தனுசுக்கு கெடுதலைச் செய்துவிடுமோ என்று நினைக்க வேண்டும். இந்த சனி உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும்.

4 ஆம் இடத்தை கெடுக்கக்கூடிய செயல்களை இந்த அர்த்தாஷ்டம சனி செய்யும், வீடு, வாகனம் போன்றவற்றில் செலவுகளை வைக்கும். வீடு, வீட்டு மனை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கட்டடம் கொத்தனார் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு கட்டுபவர்கள் யாரையும் நம்பாமல் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படும்.

பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனத்தை வாங்க முடியாத சூழல் ஏற்படும். அம்மாவைப் பிரிவதற்கான சூழல் ஏற்படும். இதனால் மன உளைச்சல்கள் உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியத்தை கவனிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். தனுசு ராசியினர் அம்மாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தஸ்து, கெளரவம் அதிகரிக்கும். இதுவரைக்கும் இருந்து வந்த கடன், நோய், எதிர்ப்புகள் தீரும். கடந்த ஓராண்டாக தனுசு ராசியினர் கடன், நோய், தொழிலில் நிம்மதியின்மையால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். ஆனால், இந்த குருப்பெயர்ச்சியில் 7 ஆம் இடத்து குரு மாற்றுவார். முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.

குறிப்பாக, கலைத் துறை, இசைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெரிய மாற்றம், முன்னேற்றம் உண்டாகும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். பெரிய அளவில் லாபங்கள் குறையாது, நஷ்டங்கள் ஏற்படாது. நாமே எல்லாவற்றையும் பார்த்து செய்ய வேண்டியதிருக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+