அதிசார குருப்பெயர்ச்சி 2025: கம்பேக்’னா இப்படி இருக்கணும் - கடக ராசிக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

அதிசார குருப்பெயர்ச்சி பலன்: அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கிரக மாற்றம்

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில ராசியினருக்கு சுப பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Athisara guru peyarchi palan Kadagam lucky zodiac signs

அதிசார குருப்பெயர்ச்சி

குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குச் செல்வார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருட குருப்பெயர்ச்சி மிகுந்த சிறப்பாகும். குரு கடகத்தில் உச்சமடைந்து மகரத்தில் நீச்சமடைகிறார். நிறைந்த மனதுடன் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

இந்த அதிசார குருப்பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்கு இந்த காலகட்டம் மிகவும் அற்புதமாக இருக்கும். உங்கள் சொந்த ராசியிலேயே குரு அதிசார பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 100க்கு 200 சதவீதம் அருமையான நற்பலன்களை மட்டுமே தருவார். பொன், பொருள், வைரம், பணம் எல்லாமே கொட்டோ கொட்டென்று கொட்டும். ராசியிலேயே குரு உச்சம் பெறுவது சிறப்பான அமைப்பாகும்.

அதிர்ஷ்டம்

பழைய பாக்கி வசூலாகும். குரு பகவான் ஐந்து ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களை பார்க்கிறார். நிலம், வீடு, வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என்று அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும். லாட்டரியில் திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட் யோகம் உண்டு. திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்களால் பொருளாதாரம் உயரும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

12 வருடங்களுக்கு ஒரு முறை

பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். காதல் உறவில் இனிமை கூடி திருமணமாக மாறும். கணவன் - மனைவி இடையே அந்தியோந்யம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் பொறுப்புகள் அதிகரித்து உயர்வடைவீர்கள். இதுபோன்ற காலம் திருப்பிக் கிடைக்காது. குறிஞ்சி பூ போல இதுபோன்ற அமைப்பு வருவதற்கு மீண்டும் 12 வருடங்களாகும்.

சனி வக்ர நிலையில் உள்ளார். அவரை குரு பகவான் பார்ப்பதால் சனி பகவானும் மங்களகரானாக மாறிவிட்டார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பார்கள். அதனால் உத்யோகம், தொழில், கல்வி, குடும்பம் அனைத்திலும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிலம், சொத்து சார்ந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்

ராசியிலேயே குரு இருப்பதால் அவ்வபோது பதற்றம், கோபம் வந்து செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வயிறு, சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அதிக எச்சரிக்கை வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் வீடு அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடுவதன் மூலம் நல்லது நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+