ஆகஸ்ட் மாத பலன் 2025: மேஷ ராசிக்கு லைப் டைம் செட்டில்மென்ட்.. குரு சுக்கிரன் இணைவால் வரும் மாற்றம்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வேகமும், துடிப்பும் மிக்கவர்களாக இருப்பீர்கள். அதற்கு காரணம் செவ்வாய் பகவான். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும். 3 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மிதுனத்தில் சுக்கிர பகவான் இருக்கப் போகிறார். மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். முதியவர்களுக்கு ஏதாவதொரு மன வேதனை, வருத்தம் இருந்து கொண்டிருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
இந்த ஆகஸ்ட் மாதத்தில் குரு, சுக்கிரன் இணைவு முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் எடுத்த காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் தொழில், வேலையைச் செல்வது நன்மை பயக்கும். காதல் உறவுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 3 வது ஸ்தானத்தில் 7 ஆம் இடத்தின் அதிபதி இருப்பதால் காதல் உணர்வுகளை அதிகப்படுத்தும்.
திருமணம்
திருமண விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். குருவும், சுக்கிரனும் அமர்ந்து 3 ஆம் இடத்தில் இருப்பதால் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுப விஷயம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்ற ஆரோக்கிய குறைகள் ஏற்படும். கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கடன் வாங்கும் வாய்ப்பு
மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கடன் வாங்கும் வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவான் இருப்பதால் பிள்ளையாருக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் தீபம் போடுவது நன்மை பயக்கும். 5 இல் கேது இருப்பவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். 10, 11க்கு அதிபதியான சனி பகவான் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால், குரு சண்டாள யோகம் உண்டாகும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
எப்படியாவது ஜெயிக்க வேண்டும் எண்ணம் தோன்றும். கெட்ட சகவாசங்கள் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சனி வக்கிரத்தில் இருப்பதால் வேலை மாற்றம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.
பயணத்தால் அனுகூலம்
சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். தகவல் தொடர்பு அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களை மேற்கொள்வீர்கள். 3 ஆம் இடத்துக்கு அதிபதியாக இருக்கக்கூடிய புதன் பகவான் 4 ஆம் இடத்தில் பயணம் செய்கிறார். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவது பெரிய வளர்ச்சி தரும். தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டாகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு, பரிகாரம்
பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல், பண வரவு உண்டாகும். நகை வாங்குவதற்கான யோகம் உண்டு. லலிதாம்பிகை வழிபாடு செய்வது அனைத்து விதமான நல்ல பலன்களையும் உங்களுக்கு கொடுக்கும். லலிதாம்பிகை நவரத்தின மாலையை படிப்பது கேட்பது மேன்மையைத் தரும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications