Mithunam: மிதுன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மிதுன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று மிதுன ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு உங்கள் ராசியில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். மூன்றாவது ஸ்தானத்தில் சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. 10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரனும், சனியும் அமர்ந்திருக்கின்றனர். கிரகணம் நடைபெறும் போது ஏற்படக்கூடிய கிரக அமைப்புகள் இப்படியாக உள்ளன.
கவலை
கிரகணத்திற்குப் பிறகு பெரிய முன்னேற்றத்தையும், உத்வேகமும் அடையக்கூடிய ராசியாக உங்கள் ராசி இருக்கும். பல்வேறு வகையான துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். ராசியில் ஜென்ம குரு இருப்பதால் சீரை குழைப்பார் என்பது பொருள். நிறைய தடுமாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். பிள்ளைகள் வெளிநாடு செல்வது, அவர்கள் வாழ்க்கை மாறப்போகுது என்பது போன்ற கவலைகள் ஏற்படும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம்
குடும்பப் பொறுப்புகள் உங்களை வாட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இவை எல்லாமே இருந்து கொண்டிருக்கும். இந்த கிரகணத்திற்குப் பிறகு நல்ல நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும். கிரகணம் நடந்து 1 மாதத்திற்குப் பின்னர் உங்களுடைய நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுநாள் வரை பல்வேறு வகையிலான துன்பங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
நல்ல வளர்ச்சி
நல்ல வளர்ச்சிகள் வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு எல்லாம் நல்ல நிதி சார்ந்த வளர்ச்சிகள் ஏற்படும். அக்கம்பக்கத்தினர், அலுவலகத்தில் இருப்பவர்களிடம் உறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. கேது 3 ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் உறவுகள், அக்கம்பக்கத்தினரிடம் பழகுவதில் தடையை ஏற்படுத்தும்.
வெளிநாடு யோகம்
தாயின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கிரகண காலத்திற்குப் பிறகு வெளிநாடு செல்லும் யோகம். நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். 9 ஆவது ஸ்தானத்தின் பெயர் பாக்கிய ஸ்தானம் என்பது பெயர். அந்த அளவுக்கு பாக்கியத்தைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தன வளர்ச்சி
4 கிரகங்கள் 10 ஆம் இடத்தில் ஒன்றாக சேர்ந்துள்ளதால் பெரிய அளவுக்கு செல்வம், செல்வாக்கு, வெளிநாடு சென்று படிக்கும் யோகம், முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், சனி பொருளாதாரத்தில் அற்புதமான மேன்மையை கொடுக்கும். திருமண வரன் அமையும். தன வளர்ச்சி ஏற்படும். சிவன், குரு, நாதன் பெயர் உடையவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications