சித்திரை மாதத்தில் சிக்ஸர் அடிக்கும் ரிஷபம் ராசி.. சொத்துகளை வாங்கி குவிக்கும் யோகம்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது ரிஷபம் ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.04.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
ரிஷபம்
உங்களுக்கு ராசியிலேயே குரு பகவான் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். அதாவது சுக்கிரன் வீட்டில் குரு பகவான் பரிவர்த்தனையில் இருக்கிறார். ஆடை, ஆபரணம் சேரும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பல்வேறு திசைகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். சுய தொழில் செய்வோருக்கு தொழில் விருத்தியாகி நல்ல பலன்களை கொடுக்கும்.
தொழில்
தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய கூட்டாளிகளை ஒதுக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளுடன் இணைவீர்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கி அடுத்தடுத்து முன்னேற்றங்கள் கிடைக்கும். சனி பகவான் அருளால் பணியில் இருப்போர் கூட அதை விட்டு விலகி, புதிய தொழில் தொடங்குவீர்கள். இப்படி உங்களின் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
பண வரவு
உங்களின் ஒவ்வொரு சிந்தனையும் வெற்றி பெறும். எட்டாம் அதிபதி ராசியில் இருப்பதால் எதிர்மறை சிந்தனைகள் மறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட காரியங்களில் அணுகூலம் ஏற்படும். பண வரவு திருப்தியாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகி பதவி, சம்பளம் உயர்வுகள் வரும்.
லாபம்
வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வியில் நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. குரு பகவான் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். லாபதிபதி தன ஸ்தானத்துக்கு செல்வதால் தொழிலில் லாபம் பல மடங்கு உயரும். முதலீடு பல மடங்காக உயரும். பழைய பாக்கி வசூலாகும்.
சொத்து
நிலம், வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை சேர்ப்பீர்கள். பழைய சொத்துகளில் இருந்த சிக்கல்கள் விலகி அதை நல்லபடியாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்போர் சிறப்பான ஏற்றத்தை காண்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த மாதம் நல்ல தகவல்களை கொடுக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும்.
கவனம்
எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவு நன்றாக இருந்தாலும் அதை கையாள்வதில் மட்டும் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். தடைகள் விலகி எல்லாவற்றிலும் வெற்றியை உறுதி செய்ய நீங்கள் குரு பகவானை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications