மகர ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் குரு.. ஏழரை சனி ஓவர்.. இனி ராஜா பகவத் மாதிரி மாறப் போறீங்க
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மகர ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மகர ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராசியதிபதியாக இருக்கக்கூடிய சனி பகவான் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏழரை சனியில் இருந்து நீங்கள் விடுதலைப் பெற்றுள்ளீர்கள். சனி பகவான் 3 ஆம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்பைத் தரும். ராசியை குரு பார்ப்பதால் கோடி நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். இருட்டாக இருந்த உங்கள் வாழ்க்கை இனி பிரகாசமாக ஜொலிக்கப் போகிறது.
முயற்சி வெற்றி பெறும்
உங்களுடைய எண்ணம், செயல், சிந்தனைகள் எல்லாம் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். ஏழரை ஆண்டுகளாக நிறைய பிரச்சனைகள், அனுபவங்களைப் பெற்று வந்த உங்களுக்கு இனி பொருளாதாரத்தில் மேன்மை அடையும் காலகட்டமாக இருக்கும். 2 ம் அதிபதியாக இருக்கக்கூடிய சனி பகவான் தனக்கு 2 ஆம் இடத்தில் போய் அமர்ந்துள்ளார். 2க்குரியவர் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் முயற்சியால் தன வரவுகள் மேம்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தன வரவு கொட்டும்
தொடர்புகள் மூலமாக தன வரவு, கம்யூனிகேஷன் மூலமாக தன வரவு, பயணங்கள் மூலமாக, ஒப்பந்தங்கள் மூலமாக தன வரவு உண்டாகும். அபரிமிதமான பண வரவைப் பெறுவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சனி, ராகு, புதனோடு சேர்ந்து இருப்பதால் எழுத்து சம்பந்தப்பட்ட, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஜாமீன், கையெழுத்து வேண்டாம்
சித்திரை மாதம் 24 ஆம் தேதி வரை எதிலும் ஜாமீன், கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. 3 ம் இடத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், அலைச்சல் ஏற்படுமே தவிர பெரிய பாதிப்பு ஏற்படாது. 4 ஆம் இடத்தில் சுக ஸ்தானத்தில் சூரியன் உச்ச பலத்தில் அமர்ந்திருக்கிறார்.
அனுகூலம்
அரசு, அரசு சார்ந்த விஷயத்தில் சில அனுகூலங்களைக் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். நீண்டநாள்களாக அரசு சார்ந்த இழுபறியாக இருந்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. 5 இல் குரு இருப்பதால் குழந்தைகளின் நலன் திருப்திகரமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
சுபக்கடன் நல்லது
புதன் பகவான் ராகுவோடு இருப்பதால் வம்பு வழக்கு எதிரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இதனால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சித்திரை 24 ஆம் தேதிக்குப் பிறகு புதன் பெயர்ச்சியான பின்னர் ஆவணம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் சரியாகும். கடன் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். கடனை சுப கடனாக மாற்றிக் கொள்வது நல்லது. திருமணம் சார்ந்த சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications