கும்பத்துக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு.. சுக்கிரனின் அருளால் அதிஷ்டம், யோகம் கொட்டும்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது கும்ப ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை சனி பகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்துகொண்டு ஏழரை சனியில் ஜென்ம சனியாக இருந்து வந்தார். இப்போது ஜென்ம சனியில் இருந்து விடுதலை பெற்றுவிட்டீர்கள். உங்களுடைய மனசு, எண்ணம், செயல், சிந்தனைகள் சிறப்பு பெறும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். கடந்த இரண்டரை வருடங்களாக மனதில் ஏதாவதொரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். அலைச்சலான காலகட்டமாக இருந்திருக்கும்.
இருட்டில் இருந்த வாழ்க்கை வெளிச்சமாக மாறும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னர் 5ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். எண்ணங்கள், சிந்தனை, செயல்களில் நிறைய நல்ல மாற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களை தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.
எதிரி தொல்லைகள், யார் நண்பர்கள், யார் உண்மையானவர்கள் என தெளிவாக கடந்த இரண்டரை வருடங்களில் புரிந்திருப்பீர்கள். தற்போது குருவின் வீட்டில் சனி, ராகு அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கு சுமூக தீர்வு கிடைக்கும். குடும்ப விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
தன விஷயம் மற்றும் பேசும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்போதுமே எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. 3 ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் விரக்தியில் இருந்த நீங்கள் புத்துணர்வு பெற்று ஓட ஆரம்பிப்பீர்கள். நிறைய பயணங்களைச் செய்வீர்கள். அதன் மூலம் அனுகூலம், ஆதாயம் உண்டாகும்.
4 ஆம் இடத்தில் குரு இருப்பதால் தாய் சார்ந்த விஷயங்களால் ஏற்பட்டு வந்த பிரச்சனை சரியாகும் காலகட்டமாக இருக்கும். தனத்துக்கு எந்தவிதமான குறைவும் இருக்காது. பணத்தை கையாளுகிற விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். 5 க்குரியவர் ராகுவோடு இணையும் போது பூர்வீகம், பூர்வீகம் சார்ந்த விஷயங்களால் பிரச்சனை, நிலைத்தன்மை இல்லாத தன்மை போன்றவை சித்திரை 24 ஆம் தேதிக்குப் பிறகு சரியாகும்.
நீண்ட நாள்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் யோகம் ஏற்படும். கடன், நோய், எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். கடனைக் கட்டி முடிக்கக்கூடிய தன்னம்பிக்கை ஏற்படும்.
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழில் செய்யும் எண்ணம் உண்டாகும். மகிழ்ச்சிகரமான மாதமாக மாறும்.
சுக்கிரன் உச்ச பலமாக இருப்பதால் நல்ல பாக்கியங்களைப் பெறுவீர்கள். எந்த பாக்கியத்திற்காக முயற்சி செய்கிறீர்களோ அது கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான முயற்சிகள் வெற்றி அடையும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications