30 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதிர்ஷ்டத்தை அள்ளும் மூன்று ராசிகள்.. நல்ல நேரம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சனி சுக்ரன் சேர்க்கை: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சனி - சுக்ரன் சேர்க்கை காரணமாக மிதுனம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் நல்ல நேரம் தொடங்கப் போகிறது. என்ன பலன்களை பெறப் போகின்றன என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 30 ஆம் தேதி சனி மற்றும் சுக்ரனின் சேர்க்கை மார்ச் 30 ஆம் தேதி மீன ராசியில் நடைபெறவுள்ளது. சனி சுக்ரனின் இந்த இணைவால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். தொழிலில் லாபம், குடும்பத்தில் சுப செய்திகள் நிகழும் அதிர்ஷ்டம் என மூன்று ராசிகளுக்கு அபரிமிதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றன.

rasi palan astrology

மிதுனம்: சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை உங்களுக்கு சுப காரியங்கள் நிகழும் யோகத்தை ஏற்படுத்தும். கர்மம பாவத்தில் இந்த நிகழ்வு உருவாகப் போவதால் இந்த நேரத்தில் உங்கள் வேலை மற்றும் வியாபாரம், தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் உண்டாகும். முதலீடுகள், சேமிப்பில் இருந்து லாபத்தைக் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்கள் உயர் கல்வியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

மகரம்: சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கையால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களுடைய ராசியில் இருந்து மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சனியின் சேர்க்கை நடைபெறுவதால் உங்களது தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கும். தேவையில்லாத செலவுகள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகளால் ஆதாயம் காண்பீர்கள்.

நல்ல வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு திட்டங்களைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் பெருகும். உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். சனி உங்கள் ராசியிலிருந்து லக்னத்திற்கும் இரண்டாவது வீட்டிற்கும் அதிபதியாக இருப்பதால் எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள்.

கும்பம் : சுக்கிரன் சனியின் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகப் போகிறது. இந்த சேர்க்கை காரணமாக செல்வம் பெருகும். திடீர் பண வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம், வளர்ச்சியைக் காண்பீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் சூழல் உருவாகும்.

நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமணமாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் அமைதி ஏற்படும். நேர்மறையான ஆற்றல்களால் புத்துணர்வு பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கூட்டு வேலைகளிலும் நீங்கள் லாபத்தைக் காண்பீர்கள். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+