டிசம்பர் மாத ராசி பலன் 2021 : துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

டிசம்பர் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்னென்ன யோகம் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கும், செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கும், குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது.

டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது உடன் சூரியன் பயணம் செய்கிறார். துலாம் ராசியில் செவ்வாய்,புதன், தனுசு ராசியில் சுக்கிரன், மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் உள்ளது.

இந்த மாதத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் 5 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசியில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நடைபெறுகிறது. அதே நேரத்தில் சனியின் பார்வையில் இருந்து செவ்வாய் விலகுவது சிறப்பு. தனுசு ராசியில் உள்ள சுக்கிரன் டிசம்பர் 8ஆம் தேதி மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து சனியோடு இணைகிறார். டிசம்பர் 10ஆம் தேதியன்று விருச்சிக ராசியில் உள்ள புதன் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் சேர்க்கையால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும். இரண்டாம் வீட்டில் கேது, சூரியன், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு,எட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் கிரகங்கள் இடப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராசியில் உள்ள செவ்வாய் சூரியன் புதனோடு இணைகிறார். திருமண சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் கை கூடி வரும் பயணங்களால் நன்மை உண்டாகும்.

வேலையில் புரமோசன்

வேலையில் புரமோசன்

குருவின் பார்வை உங்களுக்கு நிறைய சாதகத்தை கொடுக்கும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். புரமோசன் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பத்தாம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுகிறது. ராசிநாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் சனியோடு இணையப்போகிறார். புதிய தொழில் தொடங்க சாதகமாக உள்ளது. புதன் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டின் மீது பார்வை படுகிறது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரியன், புதன் தனுசு ராசியில் இணைந்து யோகத்தை கொடுப்பது சிறப்பு. பெண்கள் இல்லத்தரசிகள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். வண்டி வாகனங்கள் வாகலாம். வீடு கட்ட முயற்சி செய்யலாம். காரமான உணவுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசியில் சூரியன், கேது, செவ்வாய், புதன் என கிரகங்கள் கூடியுள்ளன. ராசி நாதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். வேலையில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். காதல் விவகாரங்கள் கை கூடி வரும்.

உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கலாம். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வேலையில் இடமாற்றம் வீட்டில் இடமாற்றம் உண்டாகும். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் சூரியன், புதன் இணைந்து பயணிக்கும் போது உயர்கல்வி யோகம் வரும். தடைகள் நீங்கி புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன மருத்துவ ஆலோசனைத் தேவைப்படும். தோல் நோய்கள் ஏற்படலாம். காது வலி, பல் வலி பிரச்சினை வரும் கவனம் தேவை.

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்குள் உள்ள சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு நகரப்போகிறார். எதிர்பாராத செலவுகள் வரும் சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது அவசியம். செவ்வாய் 12ஆம் வீட்டிற்கு வந்து சூரியன் கேது உடன் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். திருமண சுப காரியங்களுக்கு முயற்சி செய்யலாம். தம்பதியர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு சொத்து சேர்க்கை ஏற்படும்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

புதன் ராசிக்குள் வருகிறார். வேலையில் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை தருகின்றனர். மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். மேற்படிப்புக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாத சனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை. செயல்களில் நிதானமும் அவசியம். வாக்கு ஸ்தானத்தில் சனியால் கோபம் வரும். பேச்சில் கவனம் தேவை. உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்ற மாதமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+