December Matha Palan: தனுசு ராசியை வச்சு செய்யப்போகும் சனி.. குருவின் அருளால் யோகமும் உண்டு
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சூரியன், செவ்வாய் சேர்ந்திருக்கிறது. 7 ஆம் இடத்தில் குரு வக்கிரமாக இருக்கிறது. சனியின் பார்வை இருப்பதால் வேலையில் பிரச்சனைகள், அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் முட்டி, தலைவலி, கண் தொடர்பான பிரச்சனைகள், டென்சன்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
4 ஆம் இடத்தில் சனி இருப்பதால் அம்மாவின் ஆரோக்கியம், உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. எப்பவோ செய்த தவறை இப்போது பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த சமயத்தில் கணவன், மனைவி ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். உத்தியோகம், வியாபாரத்தில் டிசம்பர் மாதத்தில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.
பயணங்களால் ஆதாயம்
100 சதவீத முக்கிய மாற்றங்கள் ஏற்படும். மிக முக்கியமான விஷயங்கள் எல்லாம் நடக்கும். புதன், சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய ஹோட்டல்களில் தங்குவது, மலைப் பிரதேசங்களுக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வது போன்ற யோகங்கள் உண்டாகும். சந்தோஷம் அதிகமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்வது, இன்பச் சுற்றுலா செல்வது, ஆன்மீக சுற்றுலா செல்வது, தான தர்மங்கள் செல்வது போன்ற யோகங்கள் உண்டாகும்.
வழிபாடு
ரத்த அழுத்தம், பிரஷர், டென்சன், கோபம் போன்றவை ஏற்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். உலகளந்த பெருமானை மனதாரா வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். டிசம்பர் 30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று ரங்கநாதரை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications