December Matha Palan: இனிமேல் எல்லாம் இப்படித்தான் - கடக ராசிக்கு லைப் டைம் செட்டில்மென்ட்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் இந்த மாதம் அற்புதமாக இருக்கும். ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருக்கிறது. ஆடம்பரமான வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். கடந்த காலங்களில் இழுபறியாக இருந்த காரியங்கள் இப்போது ஒவ்வொன்றாக நிறைவேறும். பிரிந்த நண்பர்கள் ஒன்றிணைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
நிம்மதி
மனதில் நிம்மதி ஏற்படும். எடுத்த காரியங்களில் எளிதாக வெற்றி பெறும் அமைப்பு உண்டு. உதவி மனப்பான்மை அதிகரிக்கும். உங்களால் சிலர் பயனடைவார்கள். கவலைகள், அழுத்தம் பறந்து போகும். புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றிலும் முத்திரை பதித்து, உங்களின் பெயர் புகழ் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் பல மடங்கு உயர்ந்து உற்சாகத்துடன் வலம் வருவீர்கள்.
காதல் உறவு
பஞ்சம ஸ்தானத்தில் புதன் - சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். பலருக்கு காதல் அமைப்பில் வெற்றி கிடைக்கும். காதல் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் கலை, விளையாட்டுத்துறைகளில் சாதனை படைப்பார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கவனம்
விரயத்தில் குரு இருக்கிறார். வம்பு வழக்குகள் அதிகரிக்கும். காவல் நிலையம், நீதிமன்றம் செல்லும் நிலை கூட ஏற்படலாம். எதிரிகள் அதிகரிப்பார்கள். வழக்குகளில் உங்களுக்கு எதிராக தீர்ப்புகள் அமையும். சிலருக்கு வாழ்க்கை துணையுடன் பிரியும் நிலை உருவாகும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
பரிகாரம்
பிறரை நம்பி இறங்கும் காரியங்களில் துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே நிதி நிர்வாகத்தின் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை நாட்களில் உங்கள் வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோயில் சென்று வழிபட வேண்டும். வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் செய்வது நற்பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications