December Matha Palan: கன்னி ராசிக்கு குஷியோ குஷி.. நினைத்து எல்லாம் நடக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

december-month-rasi-palan-kanni-rasi-people-will-get-good-fortunes-and-lots-of-money-in-this-month

லட்சுமி நாராயண யோகம்

குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 10 ஆம் இடத்தில் குரு வக்கிரமாகி அமர்ந்திருக்கிறார். புதன் சுக்கிரனுடன் சேர்ந்து செவ்வாய் வீட்டிலும், திரிகோணத்தில் சனியும் இருக்கிறது. 3, 5, 11 பாவம் என்பது இன்பத் திரிகோணம். நிறைய வெளியூர், இன்பச் சுற்றுலா, வெளிநாடு, வாகனத்தில் தொலைதூரம் சென்று வருவது போன்ற யோகங்கள் ஏற்படும். மனம் லேசாக இருக்கும்.

ஆரோக்கியம்

நிறைய காமெடிகளை பார்த்து ரசிப்பீர்கள். நண்பர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். 4 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் சேர்வதால் தாய், தந்தையின் உடல்நலனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அம்மாவிற்கு ஆரோக்கியக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முன்னோர்கள், பெரியவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரும் என்பதால் அவர்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

வேலை கிடைக்கும்

பிள்ளைகளை துன்புறுத்துவதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளை கோபப்படுத்தாமல் அவர்களுடைய வழியிலேயே சென்று தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மத்திய அரசு வேலை, வங்கி வேலை, வெளிநாட்டில் வேலை, வெளியூரில் புரொபஷராகும் வேலை, எம்பசியில் வேலை கிடைக்கும் யோகம், கோவில்களில் வேலை போன்றவை கிடைக்கும் யோகம் ஏற்படும்.

கொண்டாட்டம்

அரசாங்கத்தின் மூலமாக நோட்டீஸ் வரும். 3 ஆம் இடத்தில் இருக்கும் புதன், சுக்கிரன் யோகத்தைக் கொடுப்பார்கள். கலைத் துறையினர், யூடியூபர், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும். ரிசார்ட் செல்வது, ட்ரிப் செல்வது போன்றவை ஏற்படும். மன மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் நடக்கும். நிறைய சுபகாரியங்கள், சந்தோஷமான காரியங்கள் போன்றவை ஏற்படும்.

வழிபாடு

நிறைய பாட்டு கேட்பீர்கள். செவ்வாய் வீட்டில் அமரும்போது கந்த சஷ்டி, சுப்பிரமணிய புஜங்கம், முருகப் பெருமான் சுதிகள் கேட்பது என அற்புதமாக இருக்கும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். பட்டீஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தையும், நல்ல மாற்றத்தையும் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+