December Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்த ஒரு மாதம் மிக மிக கவனம் – ஆரோக்கியத்தில் ஆபத்து
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சூரியன் செவ்வாய் இரண்டும் நேரடியாக உங்கள் ராசியை பார்க்கிறார்கள். ராசி, லக்னத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். இது நல்ல அமைப்பு கிடையாது. வம்பு, வழக்குகள் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகம் இருக்கும். உறவுகளிடையே பிரிவுகள் ஏற்படலாம்.
இழுபறி
மன சஞ்சலங்கள், கவலைகள் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். உத்யோகம், தொழில் தொடர்பாக வெளியூர், வெளிநாடுகளில் சிறிது காலம் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும். எனவே யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், முயற்சிகளில் இழுபறி ஏற்படும். புதிய முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்படும்.
ஆரோக்கியம்
வாழ்க்கை துணை ஆரோக்கியம், இரண்டாம் குழந்தையின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூளை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்த பிரச்சனைகள் இருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சின்ன பிரச்சனை என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.
பரிகாரம்
தொழிலில் கூட்டாளிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய கூட்டாளிகளை நம்பி செல்ல வேண்டாம். வீண் விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் முழுவதும் புதன்கிழமை தோறும் நரசிம்மர் கோயில் சென்று காலை 6
- 7 மணியளவில் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவது தடைகளை நீக்கி நற்பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications