Dhanusu: தனுசு ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. பணவரவு அற்புதமாக இருக்கும்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு புதிய முயற்சிகள் கைகூடும். புதிய வாய்ப்புகள் கைகூடும். எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் யோகம் உண்டு. மன நிலை நன்றாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். எந்த விஷயமாக இருந்தாலும் செய்து முடிக்க முடியும் என்கிற தைரியம் ஏற்படும். பற்கள், தாடைகள், கண் பார்வைக்கு மேல், புருவம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டங்களில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. அதட்டிப் பேசுவது, மிரட்டுவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் முயற்சிகளில் சிறிய சிறிய தடை, தாமதம் ஏற்படும். நட்பால் பெரிய அளவு வெற்றிகள் ஏற்படும். பல பேர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தன்னம்பிக்கை
தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் யோக பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். விடுபட்ட வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். உணவு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவுகளைப் பார்ப்பது, நண்பர்களைப் பார்ப்பது, புதிய அறிமுகங்கள் கிடைக்கும் அனுகூலம் உண்டு.
பணவரவு
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். நேர்காணல்களில் பங்கேற்பீர்கள். நிறைய பேரின் நண்பர்களாக மாறுவீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வழிபாடு
ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும் அற்புதமான காலகட்டம். விநாயகரை வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கத்தைக் கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும். நிறைய வாய்ப்புகள் வரும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். ராமானுஜர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications