Rasi Palan This Week: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. பொறுமை ரொம்ப அவசியம்
Dhanusu Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டு. உறவுகள் மேன்மை அடையும். அவர்களால் சந்தோஷங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த பல நிலைமைகள் மாறும் அமைப்பு உள்ளது. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். துணையிம் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசுவது நல்லது.
பொறுமை அவசியம்
விளையாட்டாக துணையிடம் பேதுவது கூட தேவையில்லாத பெரிய பிரச்சனைகளைக் கொடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். எல்லாவற்றிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் பேசுவது நல்லது. குரு 7 ஆம் இடத்தில் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. தாய் வழி, உறவு, தந்தை வழி உறவுகளுடன் விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து கொள்ளும் அமைப்பு ஏற்படும்.
குரு பார்வை
குருவின் பார்வையில் இருப்பதால் சுபகாரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். வண்டி, வாகனங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில் அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்திகள் ஏற்படும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எப்போதும் நன்மைகள் அதிகரிப்பதற்கு குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது, நாராயணியத்தில் உள்ள 100 ஆவது பாடலைக் கேட்பது நன்மையைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications