Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். எப்போதும் கோபம், உணர்ச்சிவசப்படுவது மற்றவர்களிடம் இருந்து உங்களை தனிமைப்படுத்தும் சூழலை ஏற்படுத்தும். எல்லா இடத்திலும், எல்லா விதத்திலும் நீங்கள் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்பதால் சிறிய சிறிய விஷயத்துக்கு பாதிக்கப்படாமல் இருப்பது நல்லது.
பதவி உயர்வு
பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி உண்டாகும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். வேறு வேலைகளுக்கு இடமாறும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
சுபகாரியம்
உங்களுடைய மேலதிகாரிகள் முழுவதுமாக நம்புவார்கள். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரிய அமைப்புகள் அடுத்தடுத்து கைகூடும். கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் மனம் விட்டுப் பேசுவது நன்மயை ஏற்படுத்தும்.
சிக்கல்கள் நீங்கும்
தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தோல் பிரச்சனை, தலை வலி, பல் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது பெரிய நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். பெருமாள் வழிபாடு, தாயார் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு உங்களை மேன்மையடையச் செய்யும். நரசிம்மர் கவசம் படிப்பது நன்மையையும், மேன்மையையும் ஏற்படுத்தும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications