Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு இந்த தீபாவளியில் பொன், பொருள் சேர்க்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மிதுன ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

diwali-rasi-palan-mithunam-rasi-people-will-get-gold-silver-during-this-period

தீபாவளி பலன்கள்

ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் மிதுன ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான தீபாவளியாக இருக்கும். 5க்கு உடைய சுக்கிரன் நீசமாக இருக்கிறார். 3க்கு உரிய சூரிய பகவான் நீசமாக இருக்கிறார். 3 முக்கியமான பார்வைகளும் உள்ளது. குரு பகவான் உங்களுக்கு 7, 10க்கு உரியவர். தற்போது 2 ஆம் இடத்தில் இருப்பது அற்புதமான விஷயமாகும். தொழில் காரகன் 2 ஆம் இடத்தில் தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றுதால் தொழிலில் அற்புதமான யோகத்தைப் பெறுவீர்கள்.

வெளிநாடு யோகம்

தன ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவது நல்ல நன்மையைக் கொடுக்கும். வெளிநாடு செல்லும் யோகங்களை அள்ளித்தரும். 7க்கு உடையவன் உச்சம் என்பதால் தொழிலில் பார்ட்னர்ஸிப் பிரச்சனைகள் சரியாகும். புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பிரிந்த கணவன், தம்பதிகள், உறவினர்கள் மீண்டும் இணையும் வாய்ப்புள்ளது.

பிரச்சனைகள் நீங்கும்

2 இல் இருக்கும் குரு பகவான் 5 ஆம் பார்வையாக 6 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 6 ஆம் இடம் என்பது ரண, ருண, ரோக, சத்ரு, வியாதி, கடன் ஸ்தானம். 6 ம் இடத்தை குரு பார்ப்பதால் உடலில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். கல்லீரல், குடல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். செவ்வாய் பகவானுடைய வீடு என்பதால் அறுவை சிகிச்சை வரை சென்ற விஷயங்கள் கூட சரியாகும்.

சொத்துகள் சேரும்

ராசிக்கு 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஆயுளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். குரு பகவான் 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இடம், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு அந்த ஆசைகள் நிறைவேறும். 10 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். அங்கு சனி வக்கிரமாக இருக்கிறார். குரு பார்வை படுவதால் வக்கிரசனி மங்கள சனியாக மாறுவார்.

தொழில்

ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 10 ஆம் இடத்தை குரு பார்க்கும்போது சனி மங்கள சனியாக மாறுவதால் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளால் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். அரசியல்வாதிகள் மக்களிடையே நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.

குழந்தை பாக்கியம்

புதன் பகவான், சூரியன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்களும் 5 ஆம் இடத்தில் இருப்பதால் மகன் பிறக்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சை பெறுபவர்களுக்கு இயற்கையிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்துகள் வாங்கியவர்களுக்கு அவற்றை பராமரிப்பது, பார்ப்பது போன்ற யோகம் உண்டாகும்.

பதவி உயர்வு

சுக்கிர பகவான் நீசமாக இருப்பதால் குழந்தை உங்களுடைய பேச்சை கேட்காமல் நடப்பார்கள். தீபாவளியன்று அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங் அல்லது அதிகாரிகளுடன் சந்திக்க நேரிட்டால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கேட்டால் கட்டாயமாக கிடைக்கும். புது வேலைவாய்ப்பால் புதிய யோகம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+