திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாளை நடைபெறாது ஏன் தெரியுமா?.. வாக்கியம் Vs திருக்கணிதம் ஒரு அலசல்!
சனிப்பெயர்ச்சி: கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. எல்லோராலும் சனிப்பெயர்ச்சி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா அல்லது அடுத்த ஆண்டு நடைபெறுமா என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சனி பகவானுக்குரிய முக்கிய திருத்தலமாகிய திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாளை (மார்ச் 29) சனிப்பெயர்ச்சி நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சனிப்பெயர்ச்சி எப்போது, திருநள்ளாறில் ஏன் சனிப்பெயர்ச்சி நாளை நடைபெறாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். அந்த வகையில் ஒரு ராசியில் நீண்டகாலம் பயணிக்கும் கிரகம் என்றால் சனி பகவான் தான். நீதிமான், மந்தன், கர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஒரு ராசியில் அதிக காலம் இருக்கக்கூடிய கிரகம் என்பதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு பாவ, புண்ணியங்களுக்கும் ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். நாம் செய்யும் நல்ல, தீய காரியங்களுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தரக்கூடியவர். அதனால் தான் கிரகங்களின் பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏழரை சனியில் படாதபாடு படுவதும், சிலர் உச்சத்துக்கு செல்வதும் அவர்களது கர்மாக்களைப் பொருத்தே அமையும். ஏழரை ஆண்டுகளில் நமக்கு கொடுக்க வேண்டிய அத்தனை நல்ல பலன்களையும், படிப்பினைகளையும் இந்த காலகட்டங்களில் கொடுத்து அருள்வார்.
பஞ்சாங்கம்
பொதுவாக சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தைப் பொருத்தவரை பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்களை ஜோதிடர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது பாரம்பரியமாக காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சனி பகவானுக்கு உரிய திருத்தலங்கலான திருநள்ளாறு, பிராணேஸ்வரி உள்ளிட்ட பல கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இதனால் தான் சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நடைபெறுவதில் பெரும் குழப்பம் ஏற்படும்.
திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி
திருக்கணிதப் பஞ்சாக்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் இரவு 11:01 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணிதம் Vs வாக்கியம்
திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியா, வாக்கியப் பஞ்சாங்கம் சரியா என்ற விவாதம் பல காலமாக சென்று கொண்டிருக்கும் விவாதமாக உள்ளது. ஒவ்வொரு ஜோதிடரும் தங்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சி, அனுபவத்தைக் கொண்டு இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் வாக்கிய பஞ்சாங்கத்தை கோயில் அனுஷ்டாக பஞ்சாங்கம் என்றும், திருக்கணிதம் என்பது மனிதர்களின் எதிர்காலம், நிகழ்காலம் போன்றவற்றை கணித்து கூறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி எப்போது?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நாளை அதாவது மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் சனீஸ்வர பகவானுக்குரிய புகழ்பெற்ற திருத்தலமான காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
திருநள்ளாறு கோயிலில் வாக்கியப் பஞ்சாங்க முறையே பின்பற்றப்படுவதால் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்டுளள அறிவிப்பில், பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
வாக்கிய பஞ்சாங்கம்
குறிப்பாக 2025 மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை பக்தர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்தப் பாரம்பரிய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம். அதனால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி எப்போது?
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி தொடர்பான நிகழ்வு நடைபெற இருக்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பர்ய வாக்கிய பஞ்சாங்க மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications