பிப்ரவரி மாத ராசி பலன் 2024: அஷ்டம சனியோடு கூட்டணி சேரும் சூரியன்.. கடக ராசிக்காரர்களுக்கு சவால்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் மகரத்திலும் கும்பத்திலும் புது கூட்டணி உருவாகிறது. சூரியன் செவ்வாயுடனுடன் பாதி நாட்களும் சனியோடு பாதி நாட்களும் பயணம் செய்வார். சனி சூரியன் கூட்டணியால் இந்த மாதத்தில் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் 4 கிரகங்கள் 7ஆம் வீட்டில் கூடியுள்ளன. அதிர்ஷ்டம் தன்னம்பிக்கை தைரியம் கூடும். சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிம்மதியான மாதமாக அமைந்துள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முயற்சி செய்யுங்கள். தடைகளை உடைக்கும் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது

அஷ்டமத்து சனி காலமாக இருந்தாலும் மற்ற கிரகங்களின் பயணம் சாதகமாக இருப்பதால் பெரிய அளவில் சாதிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண சுப காரியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல்கள் அதிகரிக்கும். கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு புரிந்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள்.
குரு பகவான் 10ஆம் வீட்டில் வலிமையாக பயணம் செய்கிறார். குருவின் துணை உங்களுக்கு கூடவே வரும். 8ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனி நிறைய தடைகளை ஏற்படுத்துவார். குரு பகவான் துணையோடு தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும்.
விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் தம்பதியர் விட்டுக்கொடுத்து ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிரச்சினைகள் எது வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் இந்த மாதத்தில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். மொத்தத்தில் பிப்ரவரி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications