பிப்ரவரி மாதம் வெச்சு செய்யப் போகுது?.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
பிப்ரவரி மாத பலன்: கிரக நிலைகளின் மாற்றம் காரணமாக பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தர காத்திருக்கிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்..
2025 புத்தாண்டில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் மாற்றம் மற்றும் இயக்கத்தால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், பொங்கல் முடிந்த பின்னர் பிப்ரவரி மாதம் பல ராசிக்காரர்களுக்கு பல்வேறு சவால்களை அளிக்கப் போகிறது.

குடும்ப வாழ்க்கை, தொழில், வியாபாரத்தில் சிரமங்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த மாதம் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த காலகட்டங்கள் எந்த ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும், எந்தவிதமான பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தங்களின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரம், வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத விதமான செலவுகளால் பாதிக்கப்படுவீர்கள். பணப் பற்றாக்குறை ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. சரியான திட்டமிடல் இருப்பது அவசியம். இதன் மூலம் நிதிச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுன ராசி: பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பீர்கள். உறவுகளுக்கிடையே பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அழுத்தத்தால் சிக்கித் தவிப்பீர்கள். நிதானமாக செயல்படுவது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். அவசரகதியில் எடுக்கப்படும் முடிவுகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. புரிந்து கொள்ளும் தன்மை மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மகரம் ராசி: பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்கள் மன அழுத்தத்தைச் சந்திப்பீர்கள். வியாபாரம், தொழில், வேலைகளில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்னைகளால் தவிக்கும் நிலை ஏற்படும். மனதில் குழப்பங்கள் தோன்றும். முக்கிய முடிவுகளை அவசரமான நேரங்களில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுவது நல்லது. எடுத்த காரியங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அதன் மூலம் மட்டுமே பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications