Magaram Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. அடுத்தடுத்து முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

february-month-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-during-this-period

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும் யோகம் உண்டாகும்.

செல்வாக்கு கூடும்

தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். நரம்பு, கண், பதட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமன், விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வாகனத்தில் சாகசங்கள் செய்வதைத் தவிர்த்து உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில், விபத்துகளில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

கவனம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு படித்து விட்டு கையெழுத்து போடுவது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கடல் கடந்து பயணம் செய்ய வேண்டிய சூழல், அலைச்சல் வந்தாலும் இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

அனுகூலம்

வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் லாபம், சந்தோஷம், அனுகூலத்தைத் தரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல், திட்டமிட்டு காய் நகர்த்துவது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+