Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதாதித்ய யோகத்தால் தனுசு ராசியினரின் கனவு நனவாகப் போகுது.. சொந்த வீடு, மனை அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் தனுசு ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

february month palan dhanusu

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீனம் ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளார். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.

சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.

அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு என்று தனிப்பட்ட குணம் உண்டு. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்கை நோக்கிப் பயணிக்குமோ அதேபோல இலக்கை நோக்கி பயணிப்பவர்களாக இருப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு புதாதித்ய யோகத்தால் நல்ல யோகம் உண்டாகும். பேச்சில் வெளிப்படைத் தன்மை உருவாகும். கணிதத்தில் நிபுணத்துவம் பெறுவீர்கள். கலைகளில் நல்ல ஈடுபாடு இருக்கும். விஞ்ஞானிகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். தனுசு ராசியினருக்கு ஊக்கம் தரும் காலகட்டமாக இருக்கும். ராசிக்கு அதிபதியான குரு பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் புதிய வேலைவாய்ப்பு நல்ல சம்பளத்துடன் கிடைக்கும்.

ராசிக்கு அதிபதியான குரு பகவான் பரிவர்த்தனையில் ஆட்சி நிலைப் பெறுகிறார். 4 ஆம் இடத்துக்குரியவர் குரு, 6 ஆம் இடத்துக்குரியவர் சுக்கிரன். இந்த இரு கிரகங்களும் ஆறாம் இடத்தையும், நான்காம் இடத்தையும் வலுப்படுத்துகின்றனர். உங்களுக்கு வீடு மனை வாங்கக்கூடிய யோகம் வரும். வீடு வாங்குவதற்கான கடன் கிடைக்கும். சிலர் பழைய லோனை அடைத்துவிட்டு இன்னொரு சொத்து வாங்குவதற்கான யோகம் ஏற்டும்.

இந்த மாதத்தில் நவசக்தி விநாயகர் வழிபாட்டை செய்வது நவக்கிரகங்களின் ஆற்றலைப் பெற்றுத் தரும். திருமண விஷயங்களை முடித்துக் கொடுக்கும் காலமாக இருக்கும். நீண்ட நாள்களாக வேலை, திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலை, அரசுத் துறையில் வேலை, திருமண யோகம் ஏற்படும். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில்வதற்கான யோகம் உண்டு. ஏற்கனவே படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பார்ட் டைம் வேலைகள் கிடைக்கும்.

படித்துக் கொண்டே வேலை செய்யும் வாய்ப்பு ஏற்படும். திருமணத் தடைகள் விலகி திருமணம் கைகூடும். தன ஸ்தானத்தில் உங்களுடைய தர்மகர்மாதிபதி இரண்டு பேரும் அமர்ந்திருப்பதால் அபரிமிதமான வருமானம் வந்து சேரும். நீங்கள் பேசும் பேச்சு மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் மகன், மகளுக்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

புதன் பகவான் மூன்றாம் இடத்துக்குச் செல்வதால் பிப்ரவரி 4 முதல் 26 ஆம் தேதி வரை உங்களைப் பற்றிய வதந்திகள் உலா வரும். உங்கள் ஒழுக்கம் சம்பந்தமான வதந்திகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புதன் சுக்கிரன் சேர்க்கை நடைபெறவுள்ளதால் நல்ல வேலை, வேலையில் புரோமோஷன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கணவரால் பிரச்சனை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வியாபாரம் கொடுக்கல் வாங்கலில் வெற்றிகரமாக இருக்கும். பிப்ரவரி 4 முதல் 26 ஆம் தேதி வரை யாருடனும் புதிய ஒப்பந்தத்தை போடாமல் இருப்பது நல்லது. இந்த விஷயங்களில் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழ்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு செல்பவர்கள் தங்களுடைய ஆவணங்களை பத்திரமாக வாய்த்துக் கொள்வது நல்லது. சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அதிர்ஷ்டமான பலன்களைப் பெற்றுத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+