கும்ப ராசியினரின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்.. சுக்கிரன் உச்சம் அள்ளி கொடுக்க போகுது
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிபார்த்து இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் கும்ப ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகரம் ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு மிக மகிழ்ச்சியான மாதம் என்றால் அது இந்த பிப்ரவரி மாதத்தை சொல்லலாம். மிகவும் அருமையான மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிர பகவான் உச்சமாக இருப்பதால் அற்புதமான நேரம்.
உங்களுடைய தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பேச்சில் அதிகாரம் பிறக்கும். ஆனால் அது ஆணவப் பேச்சாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்வ வளம் கொழிக்கும் மாதமாக உங்களுக்கு இந்த மாதம் இருக்கும். தன ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் குடும்பத்தில் நல்ல அபரிமிதமான வருமானம் வரும். மன மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
ராசிக்கு அதிபதியான சனி பகவான் ராசியில் அமர்ந்திருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி சனியுடன் புதன் பகவான் வந்து இணைகிறார். புதன் பகவான் உங்களுடைய பஞ்சமாதிபதி என்பதால் குலதெய்வத்தின் அனுக்கிரகம் உண்டாகும். இந்த மாதம் முழுவதுமே குல தெய்வ வழிபாடு செய்வது உயர்வைத் தரும். உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், ஹார்மோன் பிரச்சனை போன்றவை ஏற்படும்.
உங்களுடைய யோகாதிபாதி தன ஸ்தானத்தில் இருப்பதால் தன லாபம் கொட்டும். உங்களுடைய சிக்கல்கள் தீரும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைவாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண யோகங்கள் கைகூடி வரும். நல்ல வரன் உங்களைத் தேடி வரும். திருமணப் பேச்சுகள் குடும்பத்தில் நடக்கும். நிறைய பண வரவு இருக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். செலவு செய்வதை கட்டுப்படுத்துவது நல்லது.
குடும்ப வாழ்க்கை சிறப்பாக செல்வ செழிப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இரண்டு நான்குக்கு அதிபதி ஒன்று சேர்வதால் வாடகை வருமானம் பெருகும். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் காவல் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக வழிபாடு செய்வது நல்லது. கருப்பண்ண சாமி, சுடலைமாட சுவாமி, மதுரை வீரன் போன்ற காவல் தெய்வ வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. செரிமானம், கழுத்து பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ராசிக்குள் புதன் வருவதால் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தடைகளும் உண்டாகும். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தடைகளைத் தாண்டி மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் கும்ப ராசியினருக்கு நல்ல நேரம் பிறக்கப் போகிறது.
மார்ச் 29 ஆம் தேதி இரவு 11 மணிக்கு உங்களுடைய ஜென்ம சனி விலகுகிறது. நல்ல காலம் பிறக்கப் போகிறது. வீட்டுக்குத் தேவையான பொருள்கள், ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை கடவுள் வாரி வழங்கக்கூடிய யோகம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி கல்வியில் முன்னற்றம் ஏற்படும். சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்












Click it and Unblock the Notifications