மஹா சங்கரஹர சதுர்த்தி விரத மகிமை: தடைகள் நீங்கி வெற்றிகளை தரும் விநாயகர்
சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி தினமாகும். விநாயகப்பெருமானுக்கு உகந்த மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகஸ்ட் 25ஆம் தேதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் போகவும் விநாயகரை வழிபடலாம்.
சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் புராண கதை
விநாயகர் ஒரு முறை கயிலாயத்தில் நடனமாடிக்கொண்டிருந் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் தோற்றத்தைக் கண்டு சிரித்தான். தன்னைப் பார்த்து சந்திரன் சிரிப்பதை பார்த்த விநாயகர், அவனின் அழகு மற்றும் கலைகள் அனைத்தும் கலையிழந்து போகுமாறு சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு தோஷங்கள் நீங்கும் என்று வரம் அளித்தார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது.

முழுமுதற்கடவுள்
ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதமாகும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது நல்லது. மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

விநாயகர் வழிபாடு தோஷம் நீங்கும்
விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர் விநாயகர்.

தேய்பிறை சந்திரன் தரிசனம்
சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் பல புராண நிகழ்வுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

சந்திர தசையால் பாதிப்பு
ஜாதகத்தில் சந்திரதிசை நடக்கும் போது சில பாதிப்புகள் வரும். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். இந்த 10 பத்து வருட காலங்களில் 12 லக்னங்களுக்கும் சந்திரன் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார். சந்திர பகவானின் திசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலமான பலன்களை தருவார்.

ரிஷபத்தில் சந்திரன்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார். சந்திரன் ரிஷப ராசியில் உச்சமடைகிறார் என்றாலும் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் நற்பலன்களை தருவது இல்லை. மிதுனத்திற்கு 2 ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார்.

கடகம் சிம்மம் கன்னி
கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் கடக ராசிக்கு சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் திசை காலத்தில் பெறலாம்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் லாபாதிபதி. சந்திர திசை சாதகமான பலன்களை கன்னி ராசியினருக்கு அள்ளித்தரும்.

சந்திரனால் நன்மை
துலா லக்னத்திற்கு 10ஆம் அதிபதியாக சந்திரன் வருவதால் சந்திர திசை நடைபெறும் போது தொழில், வியாபாரங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.விருச்சிகத்தில் சந்திரன் நீசமடைகிறார். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் பாதிப்பை தருவார். தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை தருவார்.

சந்திரதசையால் பலன்
மகர லக்னத்திற்கு சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் வாழ்வில் சற்று ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்துவார். கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

செல்வ வளம் பெருகும்
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருப்பது நன்மை தரும். விநாயகர் தரிசனம், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, விநாயகருக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பது போன்றவை சிறந்த வழிகளாகும். கடன் பிரச்னைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை நேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து வணங்க வேண்டும். விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்ற வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications