புதிய வேலை, பெரிய வீடு.. குரு அதிசார பெயர்ச்சி மீன ராசிக்கு தரும் யோகம்.. இந்த விஷயங்களில் கவனம்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், மீனம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-meenam-rasi-people-get-during-this-period

மீன ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். மீன ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மீன ராசி பலன்

மீன ராசியினருக்கு 6 ஆம் இடத்துக்கு குரு பகவான் போவதால் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்குள் பஞ்சாத்து, வேலை பார்க்கக்கூடிய இடத்தில் விதிமுறைகள் பேசுவது, நன்றாகவே வேலை செய்தாலும் அதில் தவறு சொல்வது போன்ற தேவையில்லாத அழுத்தம் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலையை விட்டு விட்டுச் செல்வதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

மேல் வயிற்றில் சில வலி, பின்புறப் பகுதி, இடுப்பு போன்றவற்றி வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கார்ப்பரேட் வேலைகளுக்குச் செல்வது, அரசு உதவிபெறும் வேலைகளுக்குச் செல்லும் அமைப்பு உள்ளது. அரசியல், நிதி சாரந்த வேலைகள், ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுவதற்கான வாய்பபுள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் பணத்திற்குப் பஞ்சம் இருக்கும்.

கவனம்

உங்கள் பேச்சு சரியாக இருக்கும். பேச்சு வன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் நபர்கள் மூலமாக தொந்தரவுகள் வருவதற்கான உள்ளது. ரூல்ஸ் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் அனுமதி கேட்டு பேசும் நிலை, அதனால் பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விரய ஸ்தானம் மற்றும் 10 ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் வேலையில் உள்ள பிரச்சனைகள், உடனிருப்பவர்களின் பிரச்சனைகள் இருந்தாலும் உங்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை கிடைக்கும்

புதிய வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். சைலண்ட் பார்ட்னர்களாக, வொர்க்கிங் பார்ட்னர்களாக இருக்கும் அமைப்பு உள்ளது. பெரிய பாதிப்புகள், நிம்மதியற்ற தன்மைகள் எதுவும் இருக்காது. தெய்வத்தின் அனுக்கிரகம் அற்புதமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி வேலையை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கான அமைப்பு உள்ளது. மகன்களுக்கு திருமணமாகும். அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களை நம்பாமல் உங்களை மட்டும் நம்புவது நன்மை பயக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அல்லது அம்பாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து, நெய் வாங்கிக் கொடுப்பது மாற்றத்தைத் தரும்.

வீடு வாங்கும் யோகம்

கடன் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. திருமணம் தாமதமாவதற்கான வாய்ப்பு ஏற்படும். வேலையில் உயர்வு ஏற்படும். பெரிய வீடு வாங்குவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். காதலில் பிரிவு வரும் அமைப்புள்ளதால் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+